தேசிய விருதுகளை வென்ற தமிழ் திரைப்படங்கள்.. வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் விஜய்

தேசிய விருதுகளை வென்ற தமிழ் திரைப்படங்கள்.. வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் விஜய்


72-வது தேசிய விருதுகள்


நேற்று 2024-ஆம் ஆண்டில் வெளிவந்த திரைப்படங்களுக்கான 72-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. 

தேசிய விருதுகளை வென்ற தமிழ் திரைப்படங்கள்.. வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் விஜய் | Cm Vijay Congratulated Winners Of National Awards

இதில், தமிழ் திரையுலகில் இருந்து, நடிகர் தனுஷ் இயக்கி, நடித்துள்ள ‘ராயன் திரைப்படத்திற்கு சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான விருது கிடைத்தது. மேலும், தனுஷ் ஹீரோவாக நடித்துள்ள கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு தேசிய, சமூக மற்றும் சுற்றுசூழல் விழுமியங்களை ஊக்குவிக்கும் சிறந்த திரைப்படத்திற்காக விருது கிடைத்தது. அப்படத்தில் நடித்த நடிகர் தனுஷுக்கு சிறப்பு பிரிவில் சிறந்த நடிகருக்கான விருதும் கிடைத்துள்ளது.

மேலும் அமரன் திரைப்படத்திற்காக இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமிக்கு சிறந்த இயக்குநருக்கான விருது, ஆர். கலைவாணனுக்கு சிறந்த படத்தொகுப்புக்கான விருது மற்றும் ஜி.வி. பிரகாஷுக்கு சிறந்த பின்னணி இசைக்கான விருதும் கிடைத்துள்ளது.

தேசிய விருதுகளை வென்ற தமிழ் திரைப்படங்கள்.. வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் விஜய் | Cm Vijay Congratulated Winners Of National Awards

மகாராஜா திரைப்படத்திற்காக அனல் அரசுக்கு சிறந்த சண்டை பயிற்சிக்கான விருது மற்றும் அப்படத்தில் விஜய் சேதுபதி மகளாக நடித்த நடிகை சாச்சனாவிற்கு சிறந்த துணை நடிகைக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மெய்யழகன் திரைப்படத்திற்காக சுரேன் ஜி என்பவருக்கு சிறப்பு பிரிவில் சிறந்த ஒலிக்கலவைக்கான விருதும், ப்ளூ என்கிற குறும்படத்திற்காக டி.எஸ். ஹரிஹர சுதனுக்கு சிறந்த ஒலி வடிவமைப்புக்கான விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விமர்சனம்


72-வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரசிகர்கள் தரப்பில் இருந்து பல கேள்விகள் கேட்கப்பட்டு வருகிறது. தகுதியுள்ள பல திரைப்படங்களுக்கு தேசிய விருதில் அங்கீகாரம் கிடைக்கவில்லை என நெட்டிசன்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்களையும் முன் வைத்து வருகிறார்கள்.  

முதலமைச்சர் வாழ்த்து


இந்த நிலையில், தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் அவர்கள், 10 தேசிய விருதுகளை வென்றுள்ள தமிழ் திரையுலகிற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதோ 

தேசிய விருதுகளை வென்ற தமிழ் திரைப்படங்கள்.. வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் விஜய் | Cm Vijay Congratulated Winners Of National Awards




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *