Titans (மலையாளம்): திரை விமர்சனம்


ஜெயசூர்யா, விநாயகன் நடிப்பில் வெளியாகியுள்ள டைட்டன்ஸ் மலையாள திரைப்படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் வாங்க.

Titans (மலையாளம்): திரை விமர்சனம் | Titans Movie Review

கதைக்களம்




டான் ஒருவரிடம் வேலை பார்த்துக்கொண்டிருந்த ஆண்டனி யகூசா (ஜெயசூர்யா), அவரது மறைவுக்கு பின்னர் மகன் பேபி ஜீனிடமும் அடியாளாக இருக்கிறார்.


ஆனால், ஆண்டனியால் பிரச்சனைகளை சந்திப்பதால் பேபி ஜீன் அவர் மீது கோபம் கொள்கிறார்.

ஒரு கட்டத்தில் ஆண்டனி செய்த வேலையால் பேபி ஜீன் ஜெயிலுக்கு செல்கிறார்.


அதனால் ஹேக்கரான அன்வருடன் சேர்ந்து கொள்ளையடிக்கும் திட்டம் தீட்டுகிறார் ஆண்டனி. அந்த சமயம் உதவிக்காக வரும் ரெஜிமோன் (விநாயகன்) சொதப்பல்கள் செய்கிறார்.

Titans (மலையாளம்): திரை விமர்சனம் | Titans Movie Review

அவரது செயல்களால் ஆண்டனி-அன்வரின் திட்டங்கள் தவிடுபொடியாகின்றன. அதே சமயம் ரெஜிமோனுக்கு ஒரு சில சக்திகள் இருக்கிறது.


அதனை கவனிக்கும் ஆண்டனி சந்தேகப்பட்டாலும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்த சூழலில் ரெஜிமோனின் கவனக்குறைவால் ஒரு திட்டம் தோல்வியில் முடிகிறது.



அதனால் பொறுமையிழக்கும் ஆண்டனி அவரை கோபமாக திட்ட, ரெஜிமோனின் உண்மைமுகம் தெரிய வந்து அதிர்ச்சியாகிறார்.


ரெஜிமோன் யார்? அவர் ஏன் ஆண்டனியுடன் இருக்கிறார் போன்ற கேள்விகளுக்கு விடையே மீதிக்கதை.

Titans (மலையாளம்): திரை விமர்சனம் | Titans Movie Review

படம் பற்றிய அலசல்




ஆடு 3 திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு ஜெயசூர்யா மற்றும் விநாயகன் இணைந்திருக்கும் படம் இது.


ஃபேண்டஸி கதைக்களத்தில் உருவாகியிருக்கும் இந்த திரைப்படத்தை பிரின்ஸ் ஜாய் இயக்கியிருக்கிறார்.




தமிழில் வெளியான சூது கவ்வும் படத்தில் வரும் விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்தைப் போன்று, ஜெயசூர்யா திட்டமிடும் ஒவ்வொன்றும் எதிர்பாராத தோல்வியிலேயே முடிகிறது.


குறிப்பாக ஒரு கடத்தல் காட்சி செம காமெடி.

Titans (மலையாளம்): திரை விமர்சனம் | Titans Movie Review

முதல் பாதியில் நிறைய காமெடிகள் ஒர்க்அவுட் ஆகியிருக்கின்றன.


இடைவேளை வரை என்னதான்பா கதை என்பது போலவே திரைக்கதை செல்வதால் பெரிதாக சுவாரஸ்யம் இல்லை.


இரண்டாம் பாதியில் திரைக்கதை அழுத்தமாக இல்லாததால், சில ட்விஸ்ட்கள் ஒர்க் ஆனாலும் சுவாரஸ்யம் குறைவாகவே உள்ளது.



அதேபோல் எங்குமே எமோஷனல் கனெக்ட் ஆகவில்லை. கிளைமேக்ஸ் எதிர்பார்த்தபடியே முடிவதும் குறைதான்.


இந்த குறைபாடுகள் இருந்தாலும் படத்தை பார்க்க வைப்பது, நடிகர்களின் பங்களிப்பு மற்றும் மேக்கிங்தான். விநாயகன் காமெடி மற்றும் ஆக்ஷ்ன் என இரண்டிலும் ஸ்கோர் செய்கிறார். ஜெயசூர்யா ஆடு படத்தில் நடித்த கதாபாத்திரம் போலவே ஆண்டனியாக சிறப்பாக நடித்துள்ளார்.

Titans (மலையாளம்): திரை விமர்சனம் | Titans Movie Review




இவர்களுடன் சன்னி வெய்ன், இந்த்ரன்ஸ், சுரேஷ் கிருஷ்ணா, பேபி ஜீன் ஆகியோர் தங்களது கதாபாத்திரங்களை கச்சிதமாக செய்துள்ளனர்.


டான் வின்சென்டின் இசை, விஷ்ணு ஷர்மாவின் ஒளிப்பதிவு, ஷமீர் முகமதுவின் படத்தொகுப்பு என டெக்னிக்கலாக படம் சூப்பர்.

க்ளாப்ஸ்




  • விநாயகன், ஜெயசூர்யா


  • டெக்னிக்கல் விஷயங்கள்



  • சண்டைக்காட்சிகள்




பல்ப்ஸ்




  • சுவாரஸ்யம் குறைவான திரைக்கதை



  • அழுத்தம் இல்லாத சில காட்சிகள்



  • எமோஷனல் கனெக்ட் ஆகாதது





மொத்தத்தில் இந்த டைட்டன்ஸ் டைம்பாஸ் மட்டுமே. ஃபேண்டஸி பட விரும்பிகள் பார்க்கலாம்.

Titans (மலையாளம்): திரை விமர்சனம் | Titans Movie Review


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *