தேவாவின் ஆஸ்தான பாடகர் கிருஷ்ணராஜ் காலமானார்


singer krishnaraj passed away: பிரபல பின்னணி பாடகர் கிருஷ்ணராஜ் இன்று காலமானார். இவருடைய மறைவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கிருஷ்ணராஜ்


தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான பின்னணி பாடகர்களில் ஒருவர் கிருஷ்ணராஜ். இவர் மறைந்த இசையமைப்பாளர் தேவாவின் ஆஸ்தான பாடகர்களில் ஒருவர்.

தேவாவின் ஆஸ்தான பாடகர் கிருஷ்ணராஜ் காலமானார் | Singer Krishnaraj Passed Away



‘பொற்காலம்’ திரைப்படத்தில் வந்த உலகளவில் மிகவும் பிரபலமான ‘தஞ்சாவூரு மண்ண எடுத்து’ பாடலை பாடியது இவர்தான். மேலும், இசையமைப்பாளர் தேவாவின் இசையில் ‘நலம் நலமறிய ஆவல்’, வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளிரிக்கா’, காத்தடிக்குது மற்றும் சூரரை போற்று படத்தில் ‘நாலு நிமிஷம் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட பாடல்களை கிருஷ்ணராஜ் பாடியுள்ளார்.



காலமானார்



இந்த நிலையில், பாடகர் கிருஷ்ணராஜ் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். இவருக்கு வயது 75. இவரது உடல் சென்னை, வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

தேவாவின் ஆஸ்தான பாடகர் கிருஷ்ணராஜ் காலமானார் | Singer Krishnaraj Passed Away

இசையமைப்பாளர் தேவா மறைந்த சில நாட்களிலேயே அவருடைய ஆஸ்தான பின்னணி பாடகரும் மறைந்தது ரசிகர்களிடையே கடும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் பலரும் தங்களது இரங்கலை சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர். 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *