உலகம் முழுவதும் மெகா ஹிட், ஆனால் தமிழகத்தில் படுதோல்வியா


விஸ்வநாத் & சன்ஸ்

சூர்யா நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் பிரம்மாண்ட எதிர்பார்ப்புடன் வெளிவந்த படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படம் உலகம் முழுவதும் ரூ. 220 கோடி வரை வசூல் செய்திருக்கும் என கூறப்படுகிறது. அதிலும் தெலுங்கில் மட்டும் உலகம் முழுவதும் இப்படம் ரூ. 80 கோடி வசூலை தாண்டியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் படுதோல்வியா!!

இந்நிலையில், ரிலீஸ் செய்த அனைத்து இடங்களிலும் மெகா ஹிட் ஆன விஸ்வநாத் அண்ட் சன்ஸ், தமிழகத்தில் மட்டும் படுதோல்வி என்று கூறப்படுகிறது. ஏனெனில், இந்த படம் தமிழகத்தில் ரூ. 100 கோடி வசூல் செய்யும் என எதிர்பார்த்த நிலையில் தற்போது 60+ கோடி தான் வசூல் செய்துள்ளது.

அதனால் தமிழகத்தில் விநியோகஸ்தர்களுக்கு இந்த படம் நஷ்டத்தை கொடுத்து இருக்கலாம் என பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் கூறுகின்றனர். அதோடு சூர்யாவின் அடுத்த படம் தீபாவளி விருந்தாக வரும் நிலையில், கண்டிப்பாக அந்த படம் தமிழகத்தில் ரூ. 100 கோடி வசூலை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *