திருமணம் ஆசை காட்டி ₹9.35 கோடி ஏமாற்றிய நடிகை? லண்டனை சேர்ந்த IT ஊழியர் அதிர்ச்சி புகார்

திருமணம் ஆசை காட்டி ₹9.35 கோடி ஏமாற்றிய நடிகை? லண்டனை சேர்ந்த IT ஊழியர் அதிர்ச்சி புகார்

பிரபல தெலுங்கு நடிகையும் பிக் பாஸ் பிரபலமமுமான அஸ்வினி ரெட்டி என்கிற ‘அஷு ரெட்டி’ தற்போது சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். அவர் திருமண ஆசை காட்டி லண்டனை சேர்ந்த தர்மேந்திரா என்ற மென்பொருள் எஞ்சினியரை திருமணம் செய்து கொள்வதாக கூறி ₹9.35 கோடி ரூபாய் மோசடி செய்ததாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது.

தர்மேந்திராவின் தந்தை சத்யநாராயணா Hyderabad Central Crime Stationல் இந்த புகாரை அளித்து இருக்கிறார்.

திருமணம் ஆசை காட்டி ₹9.35 கோடி ஏமாற்றிய நடிகை? லண்டனை சேர்ந்த IT ஊழியர் அதிர்ச்சி புகார் | Complaint Ashu Reddy Cheating 9 Crs On Marriage


பணம் வாங்கி ஏமாற்றினார்

2018ல் அஷு ரெட்டி தனது மகன் தர்மேந்திராவை சந்தித்தார், பழகி காதலிக்க தொடங்கி அதன் பின் திருமணம் செய்து கொள்வதாகவும் கூறினார்.

அந்த நம்பிக்கையில் நடிகை கேட்டதை எல்லாம் தனது மகன் வாங்கி கொடுத்தார். அது சின்ன தொகை எல்லாம் இல்லை. சொகுசு கார், 5 கிலோ தங்கம், அந்த நடிகையின் பெயரில் பல பிளாட்கள் எல்லாம் வாங்கி கொடுத்திருக்கிறார்.

2020ல் நடிகையின் குடும்பம் தலையிட்டு திருமணம் செய்து வைப்பதாக கூறினார்கள். அதன் பிறகு மீண்டும் பல வழிகளில் பணம் வாங்கினார்கள்.

ஆனால் அதன் பிறகு திருமணம் செய்யாமல் குடும்பத்துடன் ஏமாற்றிவிட்டார்கள். நடிகையின் சகோதரி வெங்கட திவ்யா ரெட்டி 50 லட்சம் ரூபாய் வாங்கிக்கொண்டு அதை திருப்பி தரவில்லை.

திருமணம் ஆசை காட்டி ₹9.35 கோடி ஏமாற்றிய நடிகை? லண்டனை சேர்ந்த IT ஊழியர் அதிர்ச்சி புகார் | Complaint Ashu Reddy Cheating 9 Crs On Marriage


2025 ஜூலை மாதத்தில் இருந்து நடிகை அஷு ரெட்டி திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து எல்லா தொடர்புகளையும் துண்டித்து விட்டார். தற்போது எங்கள் மீது பொய் வழக்கு போடுவதாக மிரட்டுகிறார்.


இவ்வாறு மாப்பிள்ளை தர்மேந்திராவின் தந்தை சத்யநாராயண மூர்த்தி புகாரில் கூறி இருக்கிறார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் அஸ்வினி ரெட்டி, அவரது அப்பா, சகோதரி, அம்மா ஆகியோர் மீது மோசடி வழக்கை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நடிகை பதிவு

தன் மீது வந்திருக்கும் புகார் பற்றி நடிகை அஸ்வினி ரெட்டி இன்ஸ்டாக்ராமில் பதிவிட்டு இருக்கிறார். “என் அனுமதி இல்லாமல், எந்த செய்தி அல்லது பொய் தகவலை வெளியிட்டால் சட்டப்படி கடுமையாக நடவடிக்கை எடுப்பேன்” என கூறி இருக்கிறார். 

Gallery

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *