மனோஜிற்கு ரோஹினி வைத்த செக், ஸ்ருதி ஜெயிக்க நீது போட்ட பிளான்… சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட்

சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியலில் இப்போது சத்யா-ரேகா இணைவார்களா என்ற போராட்டம் நடக்கிறது.
இன்னொரு பக்கம் மனோஜ்-ரோஹினி விவாகரத்து பெறுவார்களா என்ற கேள்வியோடு கதை நகர்கிறது.
எபிசோட்
முத்து மீனா இருவரும் விஜயா புதியதாக யூடியூப் சேனல் தொடங்குவது குறித்து பேசுகிறார்கள். அப்போது முத்து நீ பூ கட்டுவதை வீடியோவாக வெளியிடு ஒரு யூடியூப் திற என கூற மீனாவும் முத்துவை ஒரு அக்கவுண்ட் ஓபன் செய்ய கூறுகிறார்.
இருவரும் ஜாலியாக பேசிக்கொண்டிருக்க இன்னொரு பக்கம் மனோஜ் ரோஹினியிடம் பணம் கொடுக்க அவர் வீட்டிற்கு செல்கிறார்.
ரோஹினி மனோஜை சாப்பிட வைத்து உன்னுடன் வாழ விரும்புகிறேன், அந்த வீட்டில் இருக்க முடியாது. தனியாக வா நாம் வாழலாம் என்கிறார். ஆனால் மனோஜ் என் அம்மா என கூற அவர் அம்மா, அம்மா என கத்துகிறார்.
பின் ரோஹினி, உனக்கு என்னிடம் விவாகரத்து வேண்டும் தானே, சரி உனக்காக வாங்கிய ரூ. 5 லட்சத்தை திருப்பி கொடு, விவாகரத்து கொடுக்க யோசிக்கிறேன் என்கிறார்.
அடுத்து நீது, பிஜுவை ரெஸ்டாரன்ட் வர வைக்கிறார், அவர் ஸ்ருதிக்கு திருமணம் செய்து வைக்க அவரது அம்மா-அப்பா பார்த்த மாப்பிள்ளை தான் அவர். நீது அவருடன் கைகோர்த்து ரவி-ஸ்ருதியை பிரிக்க பிளான் போடுகிறார்.






