Street Flighter திரை விமர்சனம்
ஹாலிவுட் திரையுலகில் ஆக்ஷன் படங்களுக்கு என மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது, அந்த வகையில் ஸ்ட்ரீட் பைட்டர் தற்போது மீண்டும் ரீபூட் செய்து இயக்குனர் Kitao இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்த நியூ வெர்சன் ஆப் ஸ்ட்ரீட் பைட்டர் எப்படி? பார்ப்போம்.
கதைக்களம்
ரியோ, கென் என்ற இரண்டு பேர் ஒரு மாஸ்டரிடம் சண்டை கற்றவர்கள். அதில் ரியோ டோர்னமெண்ட் ஒன்றில் சாம்பியன் ஆகிறார், அதை தொடர்ந்து சில வருடங்களிலேயே மாஸ்டரின் சகோதரன் அகுமாவின் கைகளால் இறக்கிறார்.
இதனால் இந்த போட்டியே வேண்டாம் என ரியோ அமைதியான வாழ்க்கை வாழ, அதே நேரத்தில் கென் கிறுத்தனமாக எதாச்சு செய்து வாழ்க்கையை ஓட்டி வருகிறார்.
அந்த நேரத்தில் லார்ட் பைசன் என்பவன் தனக்கு மிகப்பெரிய சக்தி கிடைக்க வேண்டும், என சைக்கோ பவர் ஒன்றை உருவாக்குகிறான், இதற்கு தலைசிறந்த வீரன் ஒருவன் வேண்டும், அதற்காக மீண்டும் ஒரு சாம்பியன் போட்டியை நடத்தி கென், ரியோவை போட்டிக்குள் கொண்டு வருகிறார்.
ரியோ வந்ததை அறிந்து மீண்டும் அகுமாவும் வர, பிறகு யார் இந்த சண்டையில் வெற்றி பெற்றார்களெ என்பதே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
ரியோ, கென் இந்த இரண்டு கதாபாத்திரம் செய்தவர்கள் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர், ரியோ நீர் போல் அமைதி, கென் நெருப்பு போல் ஆர்பாட்டம் என படம் முழுவதும் சிறப்பாக செய்துள்ளனர்.
இதெல்லாம் விட நம்ம துப்பாக்கி வில்லன் வித்யூ ஜமால் ஒரு சூப்பர் கதாபாத்திரம் கலக்கியுள்ளார், இவர் போடும் ஸ்டெண்ட்ஸுகெல்லாம் நம்ம ஊரிலேயே பல வாய்ப்பு கிடைக்க வேண்டும், ஆனால் கிடைக்காதது நமக்கு தான் இழப்பு.
மேலும் கென், ரியோ, மாஸ்டர், அகுமா ப்ளாஷ்பேக் காட்சிகளை அனிமே வடிவில் காட்டியது சிறப்பு, கிளைமேக்ஸ் சண்டைக்காட்சி, ஜேசன் மோமா காட்சிகள் என சிலது ரசிக்க வைக்கிறது.
இதை தாண்டி படத்தில் கொஞ்சம் கூட சுவார்ஸ்யாம் என்பதே இல்லை, அதிலும் சண்டை போடுவார்கள் என காத்திருந்து காத்திருந்து போட்டி ஆரம்பிக்கவே ஒரு மணி நேரம் ஆகிறது, அதுவரை வந்த துக்கடா சண்டை காட்சிகளும் சுவாரஸ்யமில்லை.
நாம் அசந்து போவது போல் ஒரு காட்சிகளும் இல்லாமல் போனது, அதிலும் அந்த வில்லன் லார்ட் பைசன் கதாபாத்திரம் என படத்தில் பல காட்சிகள் சொதப்பல் தான். டெக்னிக்கலாக பின்னணி இசை மட்டுமே ஆறுதல்.
க்ளாப்ஸ்
-
ரியோ, கென் -
கிளைமேக்ஸ் சண்டை காட்சிகள்.
பல்ப்ஸ்
-
கொஞ்சம் கூட சுவாரஸ்யமில்லாத திரைக்கதை
மொத்தத்தில் இந்த ஸ்ட்ரீட் பைட்டர் சண்டையும் கம்மி, சுவாரஸ்யமும் கம்மி
