விஜய் டிவியில் 1 மணி நேரம் ஒளிபரப்பாக போகும் ஹிட் சீரியல்… எது தெரியுமா?

விஜய் டிவியில் 1 மணி நேரம் ஒளிபரப்பாக போகும் ஹிட் சீரியல்… எது தெரியுமா?

விஜய் டிவி

ஒவ்வொன்றும் ஒரு ரகம் என்பது போல விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் எல்லா சீரியல்களுமே ஒவ்வொரு விதமான கதைக்களத்தை கொண்டது.

சிறகடிக்க ஆசை எடுத்தால் குடும்ப கதை என்றாலும் அம்மாவே தனது சொந்த மகனை வெறுக்கும் ஒரு கதை, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 கூட்டுக் குடும்பம் அதனால் வரும் சவால்கள், பிரச்சனைகளை பற்றி பேசுகிறது.

விஜய் டிவியில் 1 மணி நேரம் ஒளிபரப்பாக போகும் ஹிட் சீரியல்... எது தெரியுமா? | Hit Serial Gonna Telecast One Hour In Vijay Tv

அய்யனார் துணை இதுவரை தமிழ் மக்கள் பார்க்காத ஒரு வித்தியாசமான கதை, அதை எடுக்கும் விதம் என எல்லாமே மக்களால் கொண்டாடப்படுகிறது. இப்படி விஜய் டிவியில் ஹிட்டாக ஒளிபரப்பாகும் சீரியல்களின் கதை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.

விஜய் டிவியில் 1 மணி நேரம் ஒளிபரப்பாக போகும் ஹிட் சீரியல்... எது தெரியுமா? | Hit Serial Gonna Telecast One Hour In Vijay Tv

ஸ்பெஷல்

சமீபத்தில் புதியதாக தொடங்கப்பட்ட கனா கண்டேனடி சீரியல் திடீரென முடிவுக்கு வருகிறது, இதுகுறித்து சீரியல் குழுவே தங்களது வருத்தத்தை தெரிவித்தார்கள்.

இந்த தொடரை தாண்டி ஒட்டுமொத்த தமிழ் மக்கள் கொண்டாடிய மகாநதி சீரியலும் முடிவுக்கு வருகிறது, இது ரசிகர்களுக்கு கடும் சோகத்தை கொடுத்த செய்தியாக உள்ளது.

விஜய் டிவியில் 1 மணி நேரம் ஒளிபரப்பாக போகும் ஹிட் சீரியல்... எது தெரியுமா? | Hit Serial Gonna Telecast One Hour In Vijay Tv

இந்த நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஒரு சீரியல் குறித்து ஸ்பெஷல் தகவல் வந்துள்ளது. அதாவது இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்து இப்போது மகனை இழந்து போராடும் தமிழ்ச்செல்வியின் பரபரப்பான கதைக்களமாக ஓடிக்கொண்டிருக்கும் சின்ன மருமகள் சீரியல் இனி 1 மணி நேரம் ஒளிபரப்பாக உள்ளதாம்.

அதாவது இரவு 9.30 மணி முதல் 10.30 மணி வரை ஒளிபரப்பாகிறதாம்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *