காதலரை பிரேக்கப் செய்த நடிகை சுனைனா.. என்ன நடந்தது?

நடிகை சுனைனாவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. ‘காதலில் விழுந்தேன்’ படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமான அவர், அதற்குப் பிறகு ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார்.
‘நீர்ப்பறவை’, ‘மாசிலாமணி’, ‘வம்சம்’, ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்திருக்கிறார்.
‘சில்லுக்கருப்பட்டி’ உள்ளிட்ட சில படங்களில் அவரது நடிப்பும் பெரிய அளவில் பாராட்டுகளைப் பெற்றது.
பிரேக் அப்
நடிகை சுனைனா பிரபல யூடியூபர் காலித் அல் அமேரி என்பவரைக் காதலித்து வந்தார். அவர் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர்கள் ஒன்றாக இருந்து வந்த நிலையில், தற்போது இன்ஸ்டாகிராமில் ஒருவரை ஒருவர் அன்ஃபாலோ செய்துவிட்டனர். அதனால் அவர்கள் பிரேக் அப் செய்து பிரிந்துவிட்டதாக தகவல் பரவி வருகிறது. மேலும் அவர்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களையும் நீக்கிவிட்டனர்.
அவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் முன்பு வந்த நிலையில், தற்போது இருவரும் பிரிந்திருப்பது பேசுபொருள் ஆகி இருக்கிறது.






