மீசைய முறுக்கு 2 முதல் நாள் செய்துள்ள வசூல்


Meesaya Murukku 2 First Day Collection: ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் நேற்று வெளியான மீசைய முறுக்கு 2 திரைப்படம் முதல் நாள் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம் வாங்க.



மீசைய முறுக்கு


ஹிப்ஹாப் தமிழா என ரசிகர்களால் கொண்டாடப்படும் ஆதி, இயக்கி ஹீரோவாக நடித்து, இசையமைத்து கடந்த 2017-ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் மீசைய முறுக்கு. இப்படத்தை தனது வாழ்க்கையை மையமாக வைத்து எடுத்திருப்பார். ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்ற இப்படம், உலகளவில் மாபெரும் வெற்றி பெற்றது.

பாக்ஸ் ஆபிஸ்: மீசைய முறுக்கு 2 முதல் நாள் செய்துள்ள வசூல் | Meesaya Murukku 2 First Day Collection


மீசைய முறுக்கு 2

முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து 9 வருடங்களுக்கு பின் மீசைய முறுக்கு 2 வெளியாகியுள்ளது. ஆனால், இதில் கானா பாடலை மையமாக வைத்து முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தை உருவாக்கியுள்ளார் ஆதி. இப்படத்தில் ஆதியுடன் இணைந்து ஹர்ஷத் கான், கருணாஸ், ரம்யா ரங்கநாதன், கெதிகா ஷர்மா, சைத்ரா அச்சர், பாபா பாஸ்கர், நாசர் ஆகியோர் நடித்துள்ளனர்.

பாக்ஸ் ஆபிஸ்: மீசைய முறுக்கு 2 முதல் நாள் செய்துள்ள வசூல் | Meesaya Murukku 2 First Day Collection


பாக்ஸ் ஆபிஸ்



நேற்று திரையரங்குகளில் வெளியான இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில், முதல் நாள் மீசைய முறுக்கு 2 திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் முதல் நாள் உலகளவில் ரூ. 10 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

பாக்ஸ் ஆபிஸ்: மீசைய முறுக்கு 2 முதல் நாள் செய்துள்ள வசூல் | Meesaya Murukku 2 First Day Collection


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *