மீண்டும் பல்லவனை காயப்படுத்திய சந்தா, சோழன், நிலா கொடுத்த பதில்… அய்யனார் துணை சீரியல் புரொமோ
Ayyanar Thunai: தமிழ் சின்னத்திரையில் ஏகப்பட்ட சீரியல்கள் ஒளிபரப்பாகிறது, அதில் ஒன்று தான் அய்யனார் துணை.
விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது, இது பாசமுள்ள 4 அண்ணன்-தம்பிகளின் வாழ்க்கை கதையாக உள்ளது. புதுமுக கலைஞர்களையும் சிலர் நாம் பார்த்து பழகிய நடிகர்களையும் வைத்து உருவாக்கப்பட்டது.
ஸ்டோரி
இப்போது கதைக்களம் கொஞ்சம் சாதாரணமாக தான் செல்கிறது. கடைசியாக சோழன் தான் செய்த வேலைக்காக பெரிய பணத்தை சம்பாதிக்க அதை வைத்து நிலாவிற்கு ஒரு தங்க வளையல் வாங்கிக்கொடுக்க ஆசைப்பட்டார்.
அதை வாங்கியதும் நிலாவிற்கு போட ஆசையாக வந்த சோழனுக்கு ஒரு ஷாக், அதாவது நகையை காணவில்லை. இதனால் உடைந்து போன சோழன் கதறி அழ பின் எப்படியோ நிலாவிற்காக வாங்கிய நகை அவர் கைக்கு வந்துவிட்டது.
ஆசை ஆசையாக நிலாவிற்காக வாங்கிய நகையை அவரது கையில் போட்டு அழகு பார்த்தார் சோழன். அடுத்த கதைக்களமாக சேரன் வீட்டிற்கு வந்துவிட்டார், அவர் வந்ததும் சோழன் நகை வாங்கிய விஷயத்தையும், பாண்டியுடன் சேர்ந்து தொழில் செய்யப்போகும் விஷயத்தையும் கூறுகிறார்.
சேரன் அந்த விஷயங்களை கேட்டு சந்தோஷப்படுகிறார், ஏதாவது பணம் வேண்டுமென்றால் கேள் ஏற்பாடு செய்து தருகிறேன் என்கிறார்.
அதைக்கேட்டதும் சந்தாவின் முகம் மாறுகிறது, காரணம் அவர் நகை வாங்கி தருகிறீர்களா என கேட்டபோது சேரன் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்றார்.
பல்லவன் சோகம்
இன்றைய எபிசோடில், சந்தா பல்லவன் பக்கத்தில் வந்து அமர்ந்து அவரது அம்மா பற்றி கேட்கிறார். உனக்கும் இவர்களுக்கும் வேறு அம்மாவாமே, எப்படி தான் சின்ன வயதிலேயே உன்னை விட்டுவிட்டு செல்ல உன் அம்மாவிற்கு மனசு வந்ததோ என பேசுகிறார்.
அதையெல்லாம் கேட்ட பல்லவன் கொஞ்சம் வருத்தப்பட்டு அங்கிருந்து சென்றுவிடுகிறார்.
பின் சோழன் அவனுக்கு அவன் அம்மா பற்றி பேசினால் பிடிக்காது என்கிறார், நிலா இதுபற்றி யாரும் பல்லவனிடம் பேச மாட்டோம், நீங்களும் அதைப்பற்றி பேச வேண்டாம் என்கிறார். ஆனால் சேரன் என்ன சொல்வது என தெரியாமல் வருத்தப்படுகிறார்.
சோழன், நிலா இருவரும் பல்லவனை ஆறுதல் செய்கிறார்கள், கடைசியாக சோழன் சந்தாவால் வீட்டில் கண்டிப்பாக பெரிய பிரச்சனை வெடிக்கும் என கூறுகிறார்.
