5 நாட்களில் சீன் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்
Scene movie 5 days worldwide Box office: சீன் திரைப்படம் சூர்யா நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்தது. இதுவரை 5 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள நிலையில், இப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.
சீன்
இயக்குநர் ஜீது மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி கடந்த நவம்பர் 6-ஆம் தேதி வெளியான திரைப்படம் சீன். இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து நஸ்ரியா, நஸ்லன், ஆனந்த்ராஜ், லால் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், டோவினோ தாமஸ் மற்றும் ஜோதிகா உள்ளிட்ட நட்சத்திரங்கள் இப்படத்தில் கேமியோ ரோலில் வந்து அசத்தியுள்ளனர்.
பாக்ஸ் ஆபிஸ் வசூல்
சீன் திரைப்படத்தின் வசூல் விவரங்களை நாம் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பார்த்து வருகிறோம். அதன்படி, 5 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் சீன், இதுவரை உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் 5 நாட்களில் உலகளவில் ரூ. 170+ கோடி வசூல் செய்துள்ளது. கண்டிப்பாக ரூ. 300 கோடிக்கும் மேல் வசூல் செய்து மாபெரும் சாதனை படைக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
பொறுப்பு துறப்பு: சீன் திரைப்படத்தின் 5 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து இங்கு பதிவிடப்பட்டுள்ள தகவல் அதிகாரப்பூர்வமானது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
