மேடையில் கண்ணீர் விட்ட நடிகை திவ்யபாரதி.. என்ன நடந்தது?
நடிகை திவ்ய பாரதி தமிழில் பேச்சிலர், மகாராஜா, கிங்ஸ்டன் போன்ற படங்களில் நடித்து இருப்பவர்.
தாராள கிளாமராக அவர் இன்ஸ்டாவில் வெளியிடும் போட்டோக்களும் அடிக்கடி வைரல் ஆகிறது.
தற்போது தெலுங்கில் அவர் GOAT என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.
கண்ணீர்
GOAT படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சிக்கு திவ்யபாரதி கவர்ச்சியான உடையில் வந்திருந்தார்.
மேடையில் பேசும்போது திவ்யபாரதி எமோஷ்னல் ஆகி கண்கலங்கிவிட்டார். அவரை மற்றவர்கள் சமாதானப்படுத்தினர்.
அதன் பின் கண்களை துடைத்துக்கொண்டு அவர் மேடையில் தொடர்ந்து பேசினார்.
