17 நாட்களில் செய்துள்ள வசூல் விவரம்

17 நாட்களில் செய்துள்ள வசூல் விவரம்


தமிழக பாக்ஸ் ஆபிஸில் தளபதி விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் 17 நாட்களில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? இதோ பாருங்க.

ஜனநாயகன்


தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் ஜனநாயகன். இப்படத்தை இயக்குநர் ஹெச். வினோத் இயக்கியிருந்தார். இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து மமிதா பைஜூ, பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ஜனநாயகன் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸ்: 17 நாட்களில் செய்துள்ள வசூல் விவரம் | Jananayagan 17 Days Tamilnadu Box Office



2026-ஆம் ஆண்டின் எதிர்பார்க்கத்தக்க திரைப்படமாக இருந்த ஜனநாயகன், பல பிரச்சனைகளையும் தடைகளையும் கடந்து வெளியானது. விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால் ரசிகர்கள் திருவிழா போல் இப்படத்தை கொண்டாடி வருகிறார்கள்.



தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸ்



ஜனநாயகன் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் சில மாநிலங்களில் தடுமாறியிருந்தாலும், தமிழ்நாட்டில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், 17 நாட்களில் தமிழ்நாட்டில் இப்படம் ரூ. 140 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜனநாயகன் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸ்: 17 நாட்களில் செய்துள்ள வசூல் விவரம் | Jananayagan 17 Days Tamilnadu Box Office

ரூ. 200 கோடி வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், லீக்காகி 1.2 கோடி பேர் பார்த்த திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 140 கோடி வசூலித்துள்ளது என்பதே மாபெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது. இறுதியாக ரூ. 150 கோடியை தொடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *