அயலி எபிசோட் அப்டேட்: வர்மாவின் முகத்தைத் தேடும் கபிலன்… ஜோக்கர் பொம்மையைக் காட்டி ஷாக் கொடுத்த வில்லன்!


Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ‘அயலி’ சீரியலில், அடுத்தடுத்து பல பரபரப்பான திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன.

கதறி அழும் செல்வநாயகி, ரித்திகா… ஆறுதல் சொல்லும் அயலி!

விசாரணைக்காக அதிகாரிகள் கபிலனை அழைத்துச் சென்றதால், வீட்டில் செல்வநாயகி தனது மகனின் நிலையை நினைத்துக் கதறி அழுகிறாள். அவரை எப்படிச் சமாதானப்படுத்துவது என்று தெரியாமல் குடும்பத்தினரும் தவிக்கின்றனர்.

மறுபக்கம் ரித்திகா, அயலியிடம் வந்து, “என் புருஷனைப் பிடிச்சிட்டு போயிட்டாங்க…” என்று சொல்லிக் கண்ணீர் விட்டு அழுகிறாள். அவளைத் தேற்றும் அயலி, “அண்ணி இருக்காங்க. அவங்க கபிலனைப் பார்த்து எப்படியாவது காப்பாத்திடுவாங்க. நீ எதுக்கும் பயப்படாதே” என்று தைரியம் கொடுக்கிறாள்.

அயலி எபிசோட் அப்டேட்: வர்மாவின் முகத்தைத் தேடும் கபிலன்... ஜோக்கர் பொம்மையைக் காட்டி ஷாக் கொடுத்த வில்லன்! | Ayali Serial Today Episode Update

மருத்துவமனையிலிருந்து வந்த அதிர்ச்சியான தகவல்!

அந்த நேரத்தில் அயலிக்கு மருத்துவமனையிலிருந்து டாக்டர் போன் செய்கிறார். இந்த விஷயம் ரித்திகாவுக்கு தெரிய வேண்டாம் என்று நினைக்கும் அயலி, தனக்குப் பசிப்பதாகச் சொல்லி ஏதாவது சாப்பிட எடுத்து வரும்படி அவளை வெளியே அனுப்புகிறாள்.

அதன்பிறகு டாக்டர் பேசும்போது, “உங்க அம்மாவுக்கு நினைவு திரும்பிடுச்சு” என்ற மகிழ்ச்சியான செய்தியைச் சொல்கிறார். இதைக் கேட்டதும் அயலி நிம்மதியடைகிறாள். ஆனால் அடுத்த நொடியே, “திடீர்னு மறுபடியும் கோமா நிலைக்குப் போயிட்டாங்க. தொடர்ந்து சிகிச்சை கொடுத்தால் குணமாக வாய்ப்பு இருக்கு” என்று டாக்டர் கூறுகிறார். இதைக் கேட்ட அயலி மீண்டும் அதிர்ச்சியிலும் கவலையிலும் மூழ்கிப் போகிறாள்.

கபிலனின் அதிரடி வாக்குறுதி :

மறுபக்கம் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கபிலனிடம் அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்துகின்றனர். அப்போது குறுக்கிடும் சிவா, “சார், இவன் சொல்றதையெல்லாம் நம்பாதீங்க. இவன் ஏதோ பிராடு பண்ணப் பார்க்கிறான்” என்று கபிலன் மீது பழி போடுகிறான்.

ஆனால் கபிலனோ கொஞ்சம்கூட பயப்படாமல், “வர்மாவைப் பற்றிய எல்லா ஆதாரமும் என்கிட்ட இருக்கு. அவனுடைய முகத்தைக்கூட இப்பவே உங்களுக்குக் காட்டுறேன். அவனுடைய சிஸ்டத்தையே நான் ஹேக் பண்ணி வச்சிருக்கேன்” என்று நம்பிக்கையுடன் சொல்கிறான்.

இதைக் கேட்ட அதிகாரிகள் ஆர்வத்துடன் பார்க்க, கபிலன் கம்ப்யூட்டரில் இருக்கும் ஒவ்வொரு போல்டராகத் திறந்து பார்க்கிறான். திரையில் லோடிங் ஆகிக்கொண்டே இருக்கிறது. கடைசியில் வர்மாவின் முகம் வரும் என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்போது, திரையில் வர்மாவுக்குப் பதிலாகச் சிரிக்கும் ஜோக்கர் பொம்மையின் படம் தோன்றுகிறது. இதைப் பார்த்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போகின்றனர்.

“நான் உங்க அப்பனுக்கே அப்பன்டா!” – வர்மாவின் மாஸ் வாய்ஸ் மெசேஜ்!

கபிலன் என்ன செய்வதென்று தெரியாமல் அதிர்ச்சியில் நிற்கும் நேரத்தில், பின்னணியில் வர்மாவின் குரல் ஒலிக்கிறது.


“லொடக்கு பாண்டி கபிலா… நீயே என்னை ஹேக் பண்ண நினைக்கும்போது, நான் எப்படி இருப்பேன்? நான் உங்க அப்பனுக்கே அப்பன்டா! என்னையெல்லாம் உன்னால அவ்வளவு சீக்கிரம் ஏமாத்த முடியாது!” என்று வர்மா தனது ஸ்டைலில் கபிலனுக்குச் சவால் விடுகிறார். இதனால் கபிலனின் திட்டம் மொத்தமாகத் தோல்வியில் முடிகிறது.

அயலி எபிசோட் அப்டேட்: வர்மாவின் முகத்தைத் தேடும் கபிலன்... ஜோக்கர் பொம்மையைக் காட்டி ஷாக் கொடுத்த வில்லன்! | Ayali Serial Today Episode Update

வர்மாவின் முகத்தைப் பார்த்த ஒரே ஆள் அர்ச்சனா!

இதற்கிடையில் விஜயகுமார் பேசிக்கொள்ளும்போது, “சீஃப்… கபிலனை நாம முழுசா டிராப் பண்ணிட்டோம். இனிமே அவனைச் சும்மா விடக்கூடாது. ஆனால் வர்மாவைப் பற்றி முழுசா தெரிஞ்சவங்க யாருமே இப்போ உயிரோட இல்லை. அவருடைய முகத்தைப் பார்த்த ஒரே பொண்ணு அர்ச்சனா மட்டும்தான். ஆனா அவ உயிரோட இருக்காளா, இல்லையான்னு இன்னும் தெரியல” என்று சொல்கின்றனர்.

இதன் மூலம் வர்மாவின் முகத்தைப் பார்த்த ஒரே நபர் அர்ச்சனா என்பதும், அவளைக் கண்டுபிடித்தால் மட்டுமே வர்மாவின் உண்மையான முகத்தைத் தெரிந்துகொள்ள முடியும் என்பதும் தெரிய வருகிறது.


இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அயலி சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *