தமிழ் திரையுலகிற்கு வரும் நடிகை கியாரா அத்வானி.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

தமிழ் திரையுலகிற்கு வரும் நடிகை கியாரா அத்வானி.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் கியாரா அத்வானி, தமிழில் என்ட்ரி தரப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கியாரா அத்வானி

எம்.எஸ். தோனி திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை கியாரா அத்வானி. இதை தொடர்ந்து லஸ்ட் ஸ்டோரீஸ், கபீர் சிங், ஷெர்ஷா, Bhool Bhulaiyaa 2, கேம் ஜேஞ்சர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து தனக்கென்று தனி இடத்தை பிடித்தார். இன்று இந்தியாவின் டாப் 10 செல்வாக்குமிக்க நடிகைகளில் ஒருவராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் திரையுலகிற்கு வரும் நடிகை கியாரா அத்வானி.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள் | Kiara Advani To Make Tamil Film Debut Very Soon

இவர் நடிப்பில் அடுத்ததாக டாக்சிக் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 26-ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தில் யாஷுக்கு ஜோடியாக நாடியா எனும் கதாபாத்திரத்தில் கியாரா அத்வானி நடித்துள்ளார்.

திருமணம்

நடிகை கியாரா அத்வானி கடந்த 2023-ஆம் ஆண்டு பிரபல நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு Saraayah மல்ஹோத்ரா எனும் மகள் இருக்கிறார்.

தமிழ் திரையுலகிற்கு வரும் நடிகை கியாரா அத்வானி.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள் | Kiara Advani To Make Tamil Film Debut Very Soon

தமிழில் என்ட்ரி

பாலிவுட் திரையுலகை தாண்டி அவ்வப்போது தெலுங்கில் படங்கள் நடித்து வரும் கியாரா அத்வானி எப்போது தமிழில் நடிக்கப்போகிறார் என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர்.

தமிழ் திரையுலகிற்கு வரும் நடிகை கியாரா அத்வானி.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள் | Kiara Advani To Make Tamil Film Debut Very Soon

இந்நிலையில், தமிழில் நடிக்க கியாரா அத்வானி ஆர்வம் காட்டி வருகிறாராம். தமிழில் முன்னணி இயக்குநர்களிடம் அவர் கதை கேட்டு வருவதாகவும், அதில் ஒரு கதையில் நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இப்படத்திற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *