எழிலை கண்டுபிடித்த கயல்.. சன் டிவி கயல் சீரியல் அடுத்த வார ப்ரோமோ

எழிலை கண்டுபிடித்த கயல்.. சன் டிவி கயல் சீரியல் அடுத்த வார ப்ரோமோ


சன் டிவியில் மிகவும் பரபரப்பாக ஓடி கொண்டு இருக்கும் முக்கிய சீரியல்களில் ஒன்று கயல். அதில் கணவர் எழிலை கண்டுபிடிக்க முடியாமல் கயல் திணறி வரும் நிலையில் தற்போது ஒரு வழியாக ஒரு துப்பு கிடைக்கிறது.

தற்போது வெளியாகியிருக்கும் அடுத்த வார ப்ரோமோ வீடியோவில் அது காட்டப்பட்டிருக்கிறது. எழில் அடிபட்டு கிடந்ததாக கூறப்படும் குப்பை மேட்டிற்கு சென்று விசாரித்தால் ஏதாவது தகவல் கிடைக்கும் என தர்மலிங்கம் கூறுகிறார்.

அதைக் கேட்டு கயலும் உடனே அங்கே சென்று துப்புரவு வேலை செய்பவர்களிடம் விசாரிக்கிறார். அவர்கள் எழில் அடிபட்டு கிடந்ததையும், அவரை தூக்கி சென்று மருத்துவமனையில் நாங்கள் தான் சேர்த்தோம் என்பதையும் கூறுகின்றனர்.

எழிலை கண்டுபிடித்த கயல்.. சன் டிவி கயல் சீரியல் அடுத்த வார ப்ரோமோ | Kayal Serial Next Week Promo Kayal Finds Ezhil

அதை கேட்டு கயல் பதற்றத்துடன் அந்த மருத்துவமனைக்கு ஓடி செல்கிறார். ஆனால் அங்கே போனால் மருத்துவமனை ரெஜிஸ்டரில் எழில் பெயர் இல்லை என்பதை பார்த்து அதிர்ச்சி ஆகிறார். மருத்துவமனை நிர்வாகம் சொல்வதைக் கேட்டால் கண்டுபிடிக்க முடியாது, அதனால் அவரே எல்லா அறைக்கும் சென்று பார்க்க தொடங்கி விடுகிறார்.

அப்போது எழில் அங்கு இருப்பதை அவர் பார்த்து விடுவாரா? ப்ரோமோ வீடியோவில் நீங்களே பாருங்கள். 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *