வசூல் வேட்டையில் சாதனை படைக்கும் கருப்பு.. மாஸ் காட்டும் நடிகர் சூர்யா..

வசூல் வேட்டையில் சாதனை படைக்கும் கருப்பு.. மாஸ் காட்டும் நடிகர் சூர்யா..


கருப்பு 

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக கொண்டாடப்பட்டு வரும் நடிகர் சூர்யா, எப்போது கமர்ஷியலாக பிளாக்பஸ்டர் திரைப்படத்தை கொடுப்பார் என கடந்த 13 ஆண்டுகளாக ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது.

அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்படி பிரம்மாண்டமான முறையில் கடந்த வாரம் வெளிவந்தது கருப்பு திரைப்படம். ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவான இப்படத்தில் த்ரிஷா, இந்திரன்ஸ், அனாகா ஆகியோர் நடித்திருந்தனர்.

மே 14ஆம் தேதி வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்ட இப்படம் பைனான்ஸ் பிரச்சனை காரணமாக மே 15ஆம் தேதி தடைகளை தாண்டி வெளிவந்தது.

வசூல் 

முதல் நாளில் இருந்து கருப்பு திரைப்படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில், 7 நாட்களுக்குள் ரூ. 200 கோடியை பாக்ஸ் ஆபிஸில் கடந்து மாபெரும் வசூல் சாதனை படைத்தது. சூர்யாவின் திரை வாழ்க்கையில் ஒரு திரைப்படம் ரூ. 200 கோடி வசூல் செய்வது இதுவே முதல்முறையாகும்.

இந்த நிலையில், 8 நாட்களில் கருப்பு திரைப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, கருப்பு திரைப்படம் 8 நாட்களில் உலகளவில் ரூ. 216 கோடி வசூல் செய்துள்ளது. 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *