2 நாட்களில் உலகளவில் ஜெயிலர் 2 திரைப்படம் செய்துள்ள வசூல்


Jailer 2 Movie 2 Days Collection: ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி சமீபத்தில் வெளியான ஜெயிலர் 2 திரைப்படம் 2 நாட்களில் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.


ஜெயிலர் 2


ரஜினிகாந்த் – நெல்சன் – அனிருத் கூட்டணியில் உருவாகி கடந்த 2023-ஆம் ஆண்டு வெளிவந்து இண்டஸ்ட்ரி ஹிட்டான திரைப்படம் ஜெயிலர். முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். எதிர்பார்த்தபடியே கடந்த 15-ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியானது ஜெயிலர் 2.

பாக்ஸ் ஆபிஸ்: 2 நாட்களில் உலகளவில் ஜெயிலர் 2 திரைப்படம் செய்துள்ள வசூல் | Jailer 2 Movie 2 Days Box Office



ரஜினியின் மாஸ் நடிப்பு, நெல்சனின் கிளாஸ் இயக்கம், அனிருத்தின் வெறித்தனமான பின்னணி இசை என படம் வேற லெவலில் உள்ளது என்று ரசிகர்கள் விமர்சனம் கூறி வருகின்றனர். இந்த நிலையில், திரையரங்குகளில் அமோக வரவேற்பை பெற்றுள்ள ஜெயிலர் 2 படத்தின் வசூல் என்னவென்று தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வத்துடன் இருப்பார்கள்.

பாக்ஸ் ஆபிஸ்: 2 நாட்களில் உலகளவில் ஜெயிலர் 2 திரைப்படம் செய்துள்ள வசூல் | Jailer 2 Movie 2 Days Box Office


பாக்ஸ் ஆபிஸ்


இந்நிலையில், 2 நாட்களை கடந்துள்ள ஜெயிலர் 2 திரைப்படம் இதுவரை உலகளவில் ரூ. 210 கோடி வசூல் செய்துள்ளது. இது இப்படத்தின் வசூல் வேட்டையின் தொடக்கம் மட்டுமே, இனி வரும் நாட்களிலும் மாபெரும் வசூல் சாதனைகளை படைக்கும் என திரை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

பாக்ஸ் ஆபிஸ்: 2 நாட்களில் உலகளவில் ஜெயிலர் 2 திரைப்படம் செய்துள்ள வசூல் | Jailer 2 Movie 2 Days Box Office


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *