அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பில் கொண்டாட்டம்.. காரணம் என்ன தெரியுமா? வீடியோ இதோ

அய்யனார் துணை
விஜய் தொலைக்காட்சியின் நம்பர் 1 சீரியலாக ஒளிபரப்பாகி வருகிறது அய்யனார் துணை. இந்த சீரியலில் தற்போது சோழனுக்கு விபத்து ஏற்பட்டு விட்டது என தெரிந்தவுடன் உடனடியாக மருத்துவமனைக்கு வந்தார்.
மீண்டும் சோழனுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க முடிவு செய்த நிலா, சோழனுக்கு விபத்து எதுவும் நடக்கவில்லை, இவை அனைத்துமே நாடகம் என தெரிந்து உடைந்துபோனார். இறுதியில் சோழன் நிலாவின் காலில் விழுந்து கடைசியாக ஒரு வாய்ப்பு கேட்க, 6 மாதம் அவகாசம் தந்தார்.
இந்த நிலையில், நிலாவிற்கும் சோழனிற்கும் விவாகரத்து ஆகிவிட்டது என்பதை நிலாவின் அம்மா, அப்பா தெரிந்துகொண்டனர்.
இதனால் அய்யனார் துணை வீட்டிற்கு அவர்கள் இருவரும் வந்து தங்களுடைய மகளுக்கு விவாகரத்து ஆகிவிட்டது, இனி அவர் சோழனுடன் சேர்ந்து வாழ வேண்டிய அவசியம் இல்லை என கூறி, நிலாவை அங்கிருந்து கிளம்பும்படி கூறுகின்றனர். இது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதன்பின் என்ன நடக்கப்போகிறது,நிலா என்ன முடிவு செய்யப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
படப்பிடிப்பில் கொண்டாட்டம்
கதைக்களம் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் நிலையில், அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு கொண்டாட்டம் அரங்கேறியுள்ளது. சேரன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் முன்னாவின் பிறந்தநாளை அனைவரும் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதோ அந்த வீடியோ:






