அச்சச்சோ அப்படி ஒன்று இல்லை.. தன்னைப்பற்றிய வதந்திக்கு நடிகை வடிவுக்கரசி பதில்…
வடிவுக்கரசி
பாரதராஜா இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த சிகப்பு ரோஜாக்கள் படத்தின் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் தான் நடிகை வடிவுக்கரசி.
அப்படத்தை தொடர்ந்து வடிவுக்கரசி நிறைய படங்கள் நடித்துள்ளார், அவரது நடிப்பு தனியாக பேசப்படும் சில படங்கள் என்றால் ஒன்று சிவாஜியுடன் அவர் நடித்த முதல் மரியாதை இன்னொன்று ரஜினியின் பாட்டியாக அருணாச்சலம் படத்தில் நடித்தது.
வெள்ளித்திரையை தாண்டி சின்னத்திரையிலும் சீரியல்கள் நடித்து அசத்தி வருகிறார்.
வதந்தி
சமூக வலைதளங்களை பலர் நல்ல விதமாக பயன்படுத்தினாலும் சிலர் தங்களது சுய லாபத்திற்காக தவறாகவும் பயன்படுத்துகிறார்கள்.
அதிலும் பிரபலங்களின் மரணம் என்று வதந்திகள் அதிகம் வருகின்றன. அப்படி அண்மையில் நடிகை வடிவுக்கரசி இறந்துவிட்டார் என வதந்தி பரவியுள்ளது.
இதுகுறித்து சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் வடிவுக்கரசி பேசும்போது, அப்படி எல்லாம் இல்லப்பா, நான் நேற்று வரை படப்பிடிப்பு முடிச்சிட்டு இன்னைக்கு பிரபு சார் படத்திற்காக காரைக்குடிக்கு பேக் பண்ணிட்டு இருக்கேன்.
நான் நல்லா இருக்கேன்பா, தேங்க்யூப்பா. எனக்காக எத்தனை இதயங்கள், நான் இத்தனை பேரை சம்பாதிச்சிருக்கேனே என வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
