பிக்பாஸ் 10 வீட்டில் Mid Week எவிக்ஷன்… வெளியேறிய போட்டியாளர் யார் தெரியுமா?
பிக்பாஸ் 10
50 நாட்களை கடந்து விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது பிக்பாஸ் 10 நிகழ்ச்சி.
விஜய் சேதுபதி தொகுத்து வழங்க கடந்த செப்டம்பர் மாதம் இந்நிகழ்ச்சி 19 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்டது. வாரா வாரம் ஒரு போட்டியாளர் எலிமினேட் ஆன வண்ணம் உள்ளார்.
கடந்த வாரத்திற்கு முன் வாரம் விஜய் சேதுபதியின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ரம்யா கிருஷ்ணன் கலந்துகொண்டு கலக்கினார். தற்போது மீண்டும் விஜய் சேதுபதி களமிறங்கிவிட்டார், கடந்த வாரம் பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து கரிஷ்மா வெளியேறி இருந்தார்.
எலிமினேஷன்
பரபரப்பின் உச்சமாக 50 நாட்களுக்கு பிறகு பிக்பாஸ் 10 நிகழ்ச்சி சூடு பிடித்துள்ளது. இந்த வாரம் அதிரடியாக பிக்பாஸ் 10 வீட்டில் Mid Week எலிமினேஷன் நடந்துள்ளதாம்.
இந்த வாரம் எலிமினேஷனுக்காக நாமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்களில் கம்மியான வாக்குகள் பெற்ற போட்டியாளர் ஒருவர் எவிக்ட் ஆகியிருக்கிறார்.
அவர் யார் என்றால் அக்ஷிதா தானாம், இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் Mid Week எலிமினேஷன் செய்யப்பட்டுள்ளார்.
