பாக்ஸ் ஆபிஸ்: டோரதி முதல் நாள் வசூல்


Dorothy Movie First Day Collection: இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் இணைந்து நடித்து வெளியாகியுள்ள டோரதி திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

டோரதி

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் கார்த்திக் சுப்பராஜ். பிட்சா, ஜிகர்தண்டா, பேட்ட, இறைவி, மஹான், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் உள்ளிட்ட நல்ல திரைப்படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார்.

இவர் இயக்கத்தில் சற்று மாறுபட்ட கதைக்களத்தில் உருவாகி வெளியாகியுள்ள திரைப்படம்தான் டோரதி. இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். மேலும் நடிகை கீர்த்தி சுரேஷ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, ரிஷிகாந்த் மற்றும் சனந்த் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நேற்று வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகள் ஒரு பக்கம் இருந்தாலும், எதிர்மறையான விமர்சனங்களும் கூறப்பட்டு வருகின்றன. சிலர் மிகவும் கடுமையாக இப்படத்தில் சொல்லப்பட்ட கருத்தை எதிர்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாக்ஸ் ஆபிஸ்

இந்த நிலையில், டோரதி திரைப்படம் முதல் நாள் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, முதல் நாள் இப்படம் ரூ. 2+ கோடி வசூல் செய்துள்ளது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *