3 நாட்களில் இம்மார்ட்டல் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்


கடந்த வாரம் திரைக்கு வந்து அமோக வரவேற்பை பெற்றுள்ள இம்மார்ட்டல் திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.


இம்மார்ட்டல்



ஹாரர் மற்றும் திரில்லர் கதைக்களத்தில், அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் உருவாகி கடந்த செப்டம்பர் 4-ஆம் தேதி வெளியான திரைப்படம் இம்மார்ட்டல். இப்படத்தில் ஜி.வி. பிரகாஷ் மற்றும் கயாடு லோஹர் முதல் முறையாக இணைந்து நடித்துள்ளனர்.

பாக்ஸ் ஆபிஸ்: 3 நாட்களில் இம்மார்ட்டல் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் | Immortal Movie 3 Days Worldwide Box Office

விறுவிறுப்பான திரைக்கதை, சஸ்பென்ஸ் மற்றும் ட்விஸ்ட் உள்ளிட்ட விஷயங்கள் மூலம் ரசிகர்களை வியக்க வைத்த இம்மார்ட்டல், விமர்சன ரீதியாக அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் முதல் நாளில் இருந்தே வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.



பாக்ஸ் ஆபிஸ்


இந்நிலையில், இம்மார்ட்டல் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 3 நாட்களை கடந்துள்ள நிலையில், இதுவரை உலகளவில் இப்படம் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 3 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 5 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூலிக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

பாக்ஸ் ஆபிஸ்: 3 நாட்களில் இம்மார்ட்டல் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் | Immortal Movie 3 Days Worldwide Box Office


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *