நாளை சன் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு சூப்பர்ஹிட் திரைப்படங்கள்..

தொலைக்காட்சி
ஓடிடி கலாச்சாரத்திற்கு பின் தொலைக்காட்சிகளில் படம் பார்ப்பது என்பது சற்று குறைந்துள்ளது.
ஆனாலும், இன்றும் கூட ஞாயிற்றுக்கிழமை எந்தெந்த தொலைக்காட்சிகளில் என்னென்ன படங்கள் ஒளிபரப்பாகிறது என்பதை தெரிந்துகொள்ளவும், அந்த படங்களை குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கவும் தனி ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களுக்கான பதிவுதான் இது.
சூப்பர்ஹிட் திரைப்படங்கள்
நாளை ஞாயிற்றுக்கிழமை அன்று சன் டிவியில் இரண்டு சூப்பர்ஹிட் திரைப்படங்கள் ஒளிபரப்பாக உள்ளன.
காலை 9.30 மணிக்கு பாரதி, கோபிகா, நாசர், வடிவேலு மற்றும் சரண்யா பொன்வண்ணன் நடிப்பில் உருவான எம். மகன் திரைப்படம் ஒளிபரப்பாகிறது. அதை தொடர்ந்து, பிற்பகல் 3.00 மணிக்கு சரத்குமார், ராதிகா, தேவயானி நடித்த சூர்யவம்சம் திரைப்படம் ஒளிபரப்பாகிறது.
90ஸ் கிட்ஸின் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ள இரண்டு சூப்பர்ஹிட் படங்கள் நாளை சன் டிவியில் ஒளிபரப்பாகின்றன; பார்த்து மகிழுங்கள்.






