தெறிக்கும் வசூல் வேட்டை செய்துள்ள ரவி தேஜாவின் இருமுடி… மொத்த கலெக்ஷன் விவரம்…


இருமுடி

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருபவர் தான் நடிகர் ரவி தேஜா.

இவர் சிவ நிர்வாணா இயக்கத்தில் இருமுடி என்ற படத்தில் நடித்துள்ளார், இப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் 21ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.

இதில் நாயகியாக ப்ரியா பவானி சங்கர் நடிக்க அவருடன் சாய் குமார், பேபி நக்சத்திரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

தெறிக்கும் வசூல் வேட்டை செய்துள்ள ரவி தேஜாவின் இருமுடி... மொத்த கலெக்ஷன் விவரம்... | Ravi Teja Irumudi Movie Final Bo

ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைப்பில் வெளியான இப்படம் தமிழில் இருமுடி கட்டு என்ற பெயரில் வெளியானது.
குடும்ப உறவுகள் மற்றும் உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவான இப்படத்தில் ரவிதேஜா தந்தை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தனது மகளின் விருப்பத்திற்காக அய்யப்ப தீட்சை மேற்கொள்ளும் தந்தையை மையமாக வைத்து கதை நகர்ந்துள்ளது. இப்படத்தில் ரவி தேஜாவின் நடிப்பு ரசிகர்களால் அதிகம் பாராட்டப்பட்டுள்ளது.

தெறிக்கும் வசூல் வேட்டை செய்துள்ள ரவி தேஜாவின் இருமுடி... மொத்த கலெக்ஷன் விவரம்... | Ravi Teja Irumudi Movie Final Bo

பாக்ஸ் ஆபிஸ்


சுமார் ரூ. 40 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் வெளியான நாள் முதல் செம வசூல் வேட்டை செய்துள்ளது. ரசிகர்களின் பேராதரவில் ஒளிபரப்பாகி வரும் இப்படம் இதுவரை ரூ. 240 கோடி வரை வசூல் வேட்டை செய்துள்ளதாம்.

திரையரங்கில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிய இப்படம் வரும் செப்டம்பர் 18ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பல மொழிகளில் வெளியாக உள்ளதாம். 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *