உயிருக்குப் போராடும் அயலி… அதிர்ச்சியில் குடும்பத்தினர்!


அயலி சீரியல்

ZEE தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ‘அயலி’ தொடரில், அடுத்தடுத்து நடக்கும் அதிரடி சம்பவங்கள் கதையை இன்னும் விறுவிறுப்பாக்கியுள்ளன.



உயிருக்குப் போராடும் அயலி… கதறி அழும் ரித்திகா!

[




அயலி ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராட, அவளை உடனே காரில் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்குப் புறப்படுகிறான் கபிலன். காரின் பின் இருக்கையில் அயலியைத் தன் மடியில் கிடத்திக்கொண்டு ரித்திகா கதறி அழுகிறாள். “அக்கா, உனக்கு ஒண்ணுமே ஆகாது… நான் இருக்கேன். உன்னை எப்படியாவது காப்பாத்திடுவேன்” என்று அவள் அழுவதைப் பார்த்து அயலியும் கலங்குகிறாள்.

தன் தங்கை இவ்வளவு பாசத்தோடு பேசுவதே போதும் என்று நினைக்கும் அயலி, இந்த அன்பை அனுபவித்துக்கொண்டே உயிர் போனாலும் பரவாயில்லை என்பது போல மனதுக்குள் போராடுகிறாள். அயலியின் இந்த நிலையைப் பார்த்து ரித்திகாவும் கபிலனும் செய்வதறியாமல் தவிக்கிறார்கள்.



சொத்துக்காக உதயபெருமாளை மிரட்டும் செல்வநாயகி!



இன்னொரு பக்கம், தன்னுடைய திட்டத்தை நிறைவேற்றுவதில் தீவிரமாக இருக்கிறான் செல்வ நாயகி உதயபெருமாளிடம் சொத்துப் பத்திரத்தைக் காட்டி மிரட்டும் அவன், “ஒழுங்கா பார்த்துக்கோ… என் பையன் இந்த வீட்டுக்குத் திரும்பி வரும்போது, இந்தச் சொத்து முழுக்க அவன் பேர்ல இருக்கணும். அப்படி இல்லன்னா, சிவா இந்த வீட்டை விட்டே நிரந்தரமா வெளியே போயிருக்கணும். நான் சொன்னது நடக்கலைன்னா, அடுத்து என்ன நடக்கும்னு எனக்கே தெரியாது” என்று கடுமையாக எச்சரிக்கிறான்.

இதைக் கேட்டு உதயபெருமாள் தயங்கினாலும், செல்வம் கொஞ்சம்கூட இறங்கிவரத் தயாராக இல்லை. தான் நினைத்தது நடந்தே ஆக வேண்டும் என்று பிடிவாதமாக நிற்கிறான்.



மருத்துவமனையில் அதிர்ச்சி… அயலிக்குக் கத்திக்குத்து!



அந்த நேரத்தில் உதயபெருமாளுக்கு போன் வர, அவர் அவசரமாக மருத்துவமனைக்குக் கிளம்பிச் செல்கிறார். அங்கே அயலியை ஸ்ட்ரெச்சரில் வைத்து அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச் செல்கிறார்கள். இதைப் பார்த்த குடும்பத்தினர் பதறிப்போய், “அயலிக்கு என்னாச்சு? என்ன நடந்தது?” என்று மாறி மாறிக் கேட்கிறார்கள்.


ஆனால், அங்கிருப்பவர்கள் என்ன சொல்வதென்று தெரியாமல் தயங்கி நிற்கின்றனர். கடைசியில் அயலிக்குக் கத்திக்குத்து விழுந்த விஷயம் தெரியவர, குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்து போகிறார்கள்.

அப்போது நிலைமையைச் சமாளிக்க நினைக்கும் கபிலன், “நகையைப் பறிக்க வந்த கொள்ளையர்கள் நாலு பேர் வழிமறிச்சாங்க. அவங்கள்கிட்ட இருந்து தப்பிக்க அயலி போராடும்போதுதான் இந்தக் குத்து நடந்துச்சு” என்று நடந்ததைச் சொல்கிறான்.



சிவாவுக்கு போன் செய்த இந்திராணி… என்ன சொல்லப் போகிறாள்?



மறுபக்கம், அயலியின் நிலையைப் பார்த்து ரித்திகா அழுதுகொண்டிருக்க, கபிலனும் பதற்றத்திலேயே இருக்கிறான். அந்த நேரத்தில் சிவாவுக்கு இந்திராணியிடமிருந்து போன் வருகிறது.


வெளியில் முக்கியமான வேலையாக இருப்பதாக சிவா சொல்ல, “டேய், இங்க என்ன விபரீதம் நடந்திருக்குன்னு தெரியுமா? அயலிக்கு…” என்று சொல்லி பாதியிலேயே நிறுத்துகிறாள் இந்திராணி.


இதைக் கேட்டதும் பதறிப்போகும் சிவா, “அயலிக்கு என்னாச்சு? சீக்கிரம் சொல்லுங்க… என்ன நடந்துச்சு?” என்று கேட்கிறான். ஆனால், உண்மையைச் சொல்லத் தயங்கும் இந்திராணி, “அயலிக்கு ஆக்சிடென்ட் ஆகிடுச்சு” என்று சமாளிக்கப் பார்க்கிறாள்.

உடனே சிவா, “எப்படி ஆச்சு? என்ன நடந்துச்சுன்னு உடனே சொல்லுங்க” என்று பதற்றத்தோடு கேட்க, “நீ நேர்ல வா, அப்புறம் சொல்றேன்” என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிடுகிறாள் இந்திராணி.



அயலி உயிர் பிழைப்பாளா? சிவாவுக்கு உண்மை தெரியுமா?




கத்திக்குத்து காயத்திலிருந்து அயலி மீண்டு வருவாளா? செல்வநாயகியின் மிரட்டலுக்கு உதயபெருமாள் பணிந்து சொத்தை எழுதிக் கொடுப்பாரா? அயலிக்கு நடந்தது விபத்து என்று இந்திராணி சொன்னதை நம்பும் சிவாவுக்கு உண்மை தெரிய வந்தால் என்ன நடக்கும்?


இப்படி அடுத்தடுத்து பல திருப்பங்களை அறிய அயலி சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *