அஜித்துடன் காரில் பயணம் செய்த முதலமைச்சர் விஜய்.. வீடியோ இதோ
அஜித் – விஜய் இருவரும் சமீபத்தில் லண்டனில் நடைபெற்ற கார் மந்தையதில் சந்தித்து நட்பு பாராட்டியது மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த நிலையில், அங்கு எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை விஜய் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
லண்டனில் விஜய் – அஜித்
நடிகரும் ரேசருமான அஜித் சமீபத்தில் லண்டனில் நடைபெற்ற கார் பந்தயத்தில் கலந்துகொண்டார். அங்கு தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் சென்று போட்டியை தொடங்கி வைத்தது மட்டுமின்றி, அஜித்தை சந்தித்தது அதன்பின் இருவரும் நட்பு பாராட்டியது, இருவரும் பரிசுகளை பகிர்ந்துகொண்டது என பல விஷயங்கள் நடைபெற்றன.
மேலும், முதலமைச்சர் விஜய்க்கு கார் ரேஸிங் உடை ஒன்றை அஜித் பரிசளித்திருந்தார். இருவரும் கார் ரேஸிங் உடையில் இந்திய கொடியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளிவந்து இணையத்தில் வைரலானது.
விஜய் வெளியிட்ட வீடியோ
இந்த நிலையில், லண்டனில் சில்வர்ஸ்டோனில் நடைபெற்ற இந்த கார் பந்தயத்தில் விஜய் கலந்துகொண்ட வீடியோ தற்போது முழுமையாக வெளியாகியுள்ளது. இதில் அஜித்தை சந்தித்தது, கார் ரேஸை தொடங்கி வைத்தது, அஜித்துடன் சேர்ந்து காரில் பயணித்தது என அனைத்தும் இடம்பெற்றுள்ளன.
இதோ அந்த வீடியோ:
— Vijay (@actorvijay) September 14, 2026
