சூர்யாவின் சீன் படம் இத்தனை கோடிகள் வசூல் செய்தால் தான் ஹிட்டா…
சீன் படம்
சூர்யா நடிப்பில் ஜீது மாதவன் இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளிவந்த படம் சீன்.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் முன்பதிவு தொடங்கிய அடுத்த நொடியே அனைத்து இடங்களிலும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
அதிலும் குறிப்பாக தமிழ் நாடு மற்றும் கேரளாவில் இப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் முன்பதிவு வசூல் ஆகி வருகிறது.
வசூல் கணிப்பு
இந்நிலையில் சீன் படம் உலகம் முழுவதும் நடந்த வியாபாரத்தின் அடிப்படையில் ரூ 195 கோடிகள் வரை வசூல் செய்தால் தான் ஹிட் ஸ்டேட்டஸ் வரும் என பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் கூறியுள்ளனர்.
சூர்யா இந்த வருடம் கருப்பு, விஸ்வநாத் அண்ட் சன்ஸ் என்ற 2 மெகா ஹிட் படங்களை கொடுத்துள்ளார், இந்த படம் மூலம் ஹாட்ரிக் அடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
