சூர்யாவின் 3 படங்களை நான் நிராகரிக்கவே இல்லை.. விளக்கம் கொடுத்த நஸ்ரியா
நடிகர் சூர்யாவின் சீன் படம் வரும் நவம்பர் 6ம் தேதி திரைக்கு வருகிறது. ஜீத்து மாதவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் அந்த படத்தில் நஸ்ரியா ஹீரோயினாக நடித்துள்ளார்.
சமீபத்தில் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சூர்யா, இதற்குமுன் நஸ்ரியா மூன்று முறை என்னுடைய படங்களில் நடிக்க மறுத்திருக்கிறார் என மேடையில் தெரிவித்தார்.
நஸ்ரியா விளக்கம்
இந்நிலையில் நேற்று கேரளாவில் சீன் பட ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சூர்யா கலந்துகொள்ளவில்லை.
அந்த நிகழ்ச்சியில் பேசிய நஸ்ரியா தான் 3 படங்களில் நிராகரித்ததாக சொன்ன விஷயம் பற்றி விளக்கம் கொடுத்தார்.
“நான் 3 படங்கள் நிராகரித்ததாக சூர்யா சார் சொன்னார். அது ஜோக். உண்மையில் டேட் மற்றும் வேறு சில குழப்பங்களால் தான் நான் நடிக்க முடியாமல் போனது. நான் சூர்யா சார் படத்தை எப்படி நிராகரிப்பின்.”
“ஜித்து மாதவன் படத்தில் நான் முதல் ஹீரோயினாக இருப்பது மகிழ்ச்சி. இந்த படத்தில் நான் ஆக்ஷன் காட்சிகளில் நடித்துள்ளேன்” என நஸ்ரியா கூறியுள்ளார்.
#Nazria at #Scene Kerala pre release event:
“#Suriya sir told, i rejected 3 of his films, it’s just a joke. Actually it was because of dates and some other confusion, how I will reject a Suriya sir film😀. I’m glad I’m the first heroine of JithuMadhavan film. I have done action… pic.twitter.com/peUEJxzrJo
— AmuthaBharathi (@CinemaWithAB) November 4, 2026
