மூக்குத்தி அம்மன் லுக்கில் நடிகை நயன்தாரா எங்கே சென்றுள்ளார் தெரியுமா?…
நயன்தாரா
நடிகை நயன்தாரா, எந்த படம் கமிட்டானாலும் அந்த படத்திற்காக தனது முழு உழைப்பையும் போடுவார்.
அப்படி அடுத்து நயன்தாரா நடிப்பில் வெளியாக இருக்கும் படம் மூக்குத்தி அம்மன் 2. சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா, ரெஜினா, யோகி பாபு என நிறைய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படம் வரும் நவம்பர் 6ம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது.
படம் வெற்றியடைய தற்போது நடிகை நயன்தாரா சென்னையில் உள்ள காலிகாம்பாள் கோவிலில் சிறப்பு பூஜை செய்து வழிபாடு செய்துள்ளார். அங்கு மூக்குத்தி அம்மன் லுக்கிலேயே சென்றுள்ளார்.
தனது வீட்டில் மூக்குத்தி அம்மன் லுக்கில் நயன்தாரா எடுத்த போட்டோஸ் இதோ,
