திருமாங்கல்யம் அப்டேட்: கஜேந்திரனிடம் இருந்து தப்பிய மகா… கௌதமின் சதியால் விமானத்தைத் தவறவிடுவாரா திரு?
திருமாங்கல்யம்
ZEE தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ‘திருமாங்கல்யம்’ தொடர், அடுத்தடுத்து நடக்கும் எதிர்பாராத திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது.
அந்த வகையில் இன்றைய எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதைப் பார்க்கலாம்.
வருணை வறுத்தெடுக்கும் மகா!
கஜேந்திரன் துரத்திக்கொண்டே வர, அவரிடமிருந்து ஒருவழியாகத் தப்பித்து ஓடுகிறார் மகா.
அந்த நேரத்தில் வருண் காரில் வந்து மகாவை அழைத்துச் செல்கிறார். வழியில் கார் நிற்கும்போது, அங்கிருக்கும் சில ஆட்டோக்காரர்கள் வருணைப் பார்த்து, “ரொம்ப நன்றி தலைவா… கிப்ட் பாக்ஸ், ஸ்வீட் எல்லாம் கொடுத்தீங்க” என்று நன்றி சொல்கிறார்கள்.
இதைக் கேட்ட மகா அதிர்ச்சியடைகிறார். ஆட்டோக்காரர்களுக்குப் பணமும் பரிசுப் பொருட்களும் கொடுத்து ஸ்டிரைக் செய்ய வைத்ததே வருண்தான் என்பதைப் புரிந்துகொள்கிறார். இதனால் கோபமடையும் மகா, வருணை சரமாரியாகத் திட்டித் தீர்க்கிறார்.
அலங்கோலமாகக் கிடக்கும் அலுவலகம்!
இதற்குப் பிறகு மகாவை அவருடைய அலுவலகத்தில் இறக்கிவிடுகிறார் வருண். உள்ளே சென்று பார்த்த மகாவுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. அலுவலகம் முழுவதும் ஒரே குப்பையாகவும் அலங்கோலமாகவும் கிடக்கிறது.
இன்று வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் முக்கியமான மீட்டிங்கிற்கு வரவிருக்கும் நிலையில், அலுவலகம் ஏன் இப்படி இருக்கிறது என்று செக்யூரிட்டியிடம் கேட்கிறார் மகா.
அதற்கு அவர், “வெள்ளிக்கிழமை ரீனா மேடமுக்கு ஃபேர்வெல் பார்ட்டி நடந்துச்சு. அதனாலதான் அலுவலகம் இப்படி இருக்கு” என்று சொல்கிறார். வேறு வழியில்லாமல் மகாவே களத்தில் இறங்கி அலுவலகத்தைச் சுத்தம் செய்ய ஆரம்பிக்கிறார்.
திருவைத் தடுக்க கௌதம் – கவிதா போடும் சதி!
மறுபக்கம், முக்கியமான வெளிநாட்டு வாடிக்கையாளர்களுடனான மீட்டிங் நடந்துவிடக் கூடாது என்று கவிதாவும் கௌதமும் திட்டம் போடுகிறார்கள். அதற்காக வெளிநாட்டிலிருந்து வரும் திருவை விமான நிலையத்திலேயே தடுத்து, அவர் விமானத்தைத் தவறவிடச் செய்ய வேண்டும் என்று முடிவு செய்கிறார்கள்.
அதன்படி, திரு விமான நிலையத்துக்குச் செல்லும் வழியில் ஒரு பெண்ணைக் கர்ப்பிணி போல நடிக்க வைத்து, “எனக்கு உடனே மருத்துவமனைக்குப் போகணும். கொஞ்சம் லிப்ட் கொடுங்க” என்று கேட்கச் சொல்கிறார் கௌதம்.
இதைப் பார்த்த டிரைவர், “வேண்டாம் சார், ஏற்கனவே நேரமாகிடுச்சு.
விமானத்தைத் தவறவிட்டுடுவோம்” என்று எச்சரிக்கிறார். ஆனால், இரக்க குணம் கொண்ட திருவோ, “பாவம், அந்தப் பெண்ணுக்கு உதவி தேவைப்படுது” என்று சொல்லி அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்கிறார்.
இதனால் திருவின் பயணம் தாமதமாகிக்கொண்டே போகிறது.
ஒருபக்கம் மகா அலுவலகத்தைச் சுத்தம் செய்து மீட்டிங்கிற்குத் தயாராகிக் கொண்டிருக்க, மறுபக்கம் கௌதமின் சதியில் சிக்கிய திரு சரியான நேரத்தில் விமான நிலையத்தைச் சென்றடைவாரா? விமானத்தைப் பிடிப்பாரா அல்லது தவறவிடுவாரா? என்ற பரபரப்பான எதிர்பார்ப்புகளுடன் இன்றைய எபிசோட் நகர்கிறது.
