பாக்ஸ் ஆபிஸ்: முதல் நாள் முடிவில் சூர்யாவின் சீன் எவ்வளவு வசூலிக்கும்… இத்தனை கோடியா?


சீன் படம்

மலையாள சினிமா இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்திற்கு பிறகு சூர்யா நடித்துள்ள படம் சீன்.

இதில் அவருடன் நஸ்ரியா நஸீம், நஸ்லின், ஆனந்த் ராஜ், லால் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறார்கள். இன்று நவம்பர் 6 படம் எல்லோரும் எதிர்ப்பார்த்தது போல் வெளியாகிவிட்டது.

இன்று மேலும் ஒரு சிறப்பு என்னவென்றால் தமிழக அரசு காலை 6 மணி காட்சிக்கு அனுமதி அளிக்க சூர்யாவின் சீன் படத்தின் முதல் காட்சி காலையிலேயே தொடங்கிவிட்டது. இப்படத்தை ஜோதிகா, கார்த்தி முதல் காட்சியே ரசிகர்களுடன் அமர்ந்து பார்த்து கொண்டாடினர்.

பாக்ஸ் ஆபிஸ்

காவல் துறை அதிகாரியான இன்பராஜுக்கு (சூர்யா) உடலில் ஒரு பிரச்சனை இருக்கிறது.

அந்த பிரச்சனையோடு ஒரு முக்கியமான வழக்கை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதுதான் படத்தின் ஒன் லைன். படத்திற்கு மக்களிடம் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது வசூலிலும் மாஸ் காட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

டிக்கெட் புக்கிங் எல்லாம் வைத்து பார்க்கையில் இப்படம் முதல் நாளில் மட்டுமே ரூ. 45 கோடிக்கு மேல் வசூலிக்கும் என கணிக்கப்படுகிறது. 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *