சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களுக்கு வந்த சூப்பர் குட் நியூஸ்… என்ன தெரியுமா?
சிறகடிக்க ஆசை
அண்ணாமலை-விஜயா ஜோடியும், அவர்களின் 3 மகன்களை பற்றிய கதையாக ஒளிபரப்பாகி வருகிறது சிறகடிக்க ஆசை சீரியல்.
கடைசி எபிசோடில் இரண்டு விஷயங்கள் நடக்கிறது, ரோஹினியை அவரது வீட்டில் சந்தித்து மீனா-ஸ்ருதி ஆறுதல் தெரிவித்து தனது ஆதரவை தெரிவிக்கிறார்கள். இன்னொரு பக்கம் மனோஜ் விவாகரத்து குறித்து கேட்க ரோஹினி அதற்கு ஞாயிறு ஒரு முடிவு கட்டுகிறேன் என கூறுகிறார்.
இந்த விஷயத்தை அடுத்து சிந்தாமணி ரேகா-சத்யாவிற்கு திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்கிறார். அதன்மூலம் சத்யா அம்மா, முத்து-மீனாவை அசிங்கப்படுத்த வேலை செய்கிறார்.
மனோஜ்-ரோஹினி விவாகரத்தில் என்ன நடக்கும், திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சிந்தாமணி என்னவெல்லாம் செய்ய காத்திருக்கிறார் என்பதை பொறுத்திருந்து காண்போம்.
குட் நியூஸ்
நாளுக்கு நாள் பிரச்சனைகளும், அதனை அண்ணாமலை குடும்பம் முறியடிப்பதுமாக கதை நகர்ந்து வருகிறது.
கடந்த ஜனவரி 2023ம் வருடம் தொடங்கப்பட்ட சிறகடிக்க ஆசை சீரியல் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தொடர் 1100 எபிசோடுகளை எட்டிவிட்டதாம். இதற்கு ஒரு புதிய டாக் கிரியேட் செய்து ரசிகர்கள் சீரியல் குழுவிற்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.
