அஜித் படத்தின் ட்ரைலர் ரெடி, ரசிகர்கள் நீண்ட நாள் காத்திருப்புக்கு செம விருந்து…
நடிகர் அஜித்
அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் எப்போதும் நடிப்பார், படம் எப்போது வரும் என கோடிக்கணக்கான ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் அஜித் அடுத்து தன் சொந்த தயாரிப்பிலேயே ஆதிக் இயக்கத்தில் டேர் டெவில் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு செப்டம்பரில் சென்னை அதை தொடர்ந்து ஐதராபாத்-தில் நடக்கவுள்ளது.
தற்போது அஜித் கார் ரேஸ் குறித்த டாக்குமெண்ட்ரி பிரமாண்டமாக உருவாகியுள்ளது. இதை இயக்குனர் விஜய் இயக்கியுள்ளார்.
இந்த டாக்குமெண்ட்ரி ட்ரைலர் மிக விரைவில் வரவுள்ளது, 3.30 நிமிடம் ஓடக்கூடிய இந்த ட்ரைலர் ஹாலிவுட் ஸ்டைலில் உருவாகியுள்ளது, அதோடு படம் அக்டோபர் மாதம் வெளிவரவுள்ளதாக்க தகவல்கள் கசிந்துள்ளது.
