Gunmaaster G9 : திரை விமர்சனம்


இம்ரான் ஹாஷ்மி, ஜெனிலியா ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள Gunmaaster G9 இந்தி திரைப்படம் எப்படி இருக்குன்னு பார்ப்போம் வாங்க.

Gunmaaster G9 : திரை விமர்சனம் | Gunmaaster G9 Movie Review

கதைக்களம்




ஹரித்துவாரில் பால் பண்ணை வைத்திருக்கும் ஈஷ்வர் (இம்ரான் ஹாஷ்மி), தனது மனைவி ஆர்த்தி (ஜெனிலியா), மகள் ஜியாவுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார்.


ஒருநாள் டெலிவரிக்கு சென்று திரும்பும்போது போலீஸ் வாகன சோதனையில் ஈடுபடுகின்றனர்.

அப்போது ஈஷ்வரை அவமானப்படுத்தும் நோக்கில் காவலர்கள் செயல்பட தன்னை யாரென்று வெளிப்படுத்துகிறார்.


அதில் அவர்கள் மிரண்டுபோக உயரதிகாரி ராணா மட்டும் நிதானமாக இருக்கிறார். தேசு ரதி கேங்கின் நாசவேலையைத் தடுக்க, ஈஷ்வரை உளவு வேலை பார்க்க சொல்கிறார்.

Gunmaaster G9 : திரை விமர்சனம் | Gunmaaster G9 Movie Review

கேங்ஸ்டராக இருந்த கேஷவ் ரதியிடம் சிறுவயதில் இருந்தே ஈஷ்வர் வேலை பார்த்து வந்தது அப்போதுதான் தெரிய வருகிறது.


துப்பாக்கி சுடுவதில் கில்லாடியான ஈஷ்வர், தனக்கு தானே Gunmaaster என பெயர் வைத்துக்கொண்டு, கேஷவின் மகன் தேசு ரதியுடன் ஒன்றாக வளர்ந்திருக்கிறார்.




பிளாஷ்பேக்கில் தனது ஆள் ஒருவரை காப்பாற்ற போன இடத்தில் கிடைத்த குழந்தை ஈஷ்வர் வளர்க்க ஆரம்பிக்கிறார்.


அவரது நண்பர் எதிரியால் சுட்டுக்கொல்லப்பட, அவரின் ஆசைப்படி தற்போது அமைதியாக குடும்பத்துடன் ஈஷ்வர் வாழ்ந்து வருகிறார்.


இந்த சூழலில்தான் ராணாவின் மூலம் மீண்டும் கேங்கிற்குள் போக வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறார் ஈஷ்வர்.

Gunmaaster G9 : திரை விமர்சனம் | Gunmaaster G9 Movie Review

அதற்கு முக்கிய காரணம் மனைவி ஆர்த்தி பற்றிய உண்மையும் மகளுக்கு தெரியக்கூடாது என்பதுதான்.


அதன் பின்னர் ஈஷ்வர் கொடுத்த வேலையை சரியாக முடித்தாரா? ஜெனிலியாவின் பின்னணி என்ன? தேசுவின் நாசவேலை தடுக்கப்பட்டதா? போன்ற கேள்விகளுக்கு விடையே மீதிக்கதை.

படம் பற்றிய அலசல்




தில் தியா ஹை படத்திற்கு பின், 20 ஆண்டுகள் கழித்து இம்ரான் ஹாஷ்மியுடன் மீண்டும் கைகோர்த்துள்ளார் இயக்குநர் ஆதித்யா தத்.


ஆரம்பம் முதல் இறுதிவரை பரபரப்பாக செல்லும் மாஸ் ஆக்ஷ்ன் படமாக Gunmaaster G9 படத்தைக் கொடுத்துள்ளார் இயக்குநர்.




பாட்ஷா டெம்ளேட் கதை என்றாலும், நான்-லீனியர் திரைக்கதையில் கொண்டு சென்றதில் ஜெயித்திருக்கிறது இப்படம்.


இந்த வாழ்க்கை வேண்டாம் எனக் கூறி சென்ற நபர், மீண்டும் கேங்கிற்குள் வருகிறேன் என்று கூறியவுடன் சந்தேகப்படாமல் எப்படி வில்லன் சேர்த்துக் கொண்டார் என்ற லாஜிக் கேள்விக்கும் சரியான ப்ளேஸ்மென்டில் பதில் கொடுத்துள்ளார் இயக்குநர்.

Gunmaaster G9 : திரை விமர்சனம் | Gunmaaster G9 Movie Review

என்னதான் ஆக்ஷ்ன் தூக்கலாக இருந்தாலும், எமோஷனல் காட்சிகள் நமக்கு கனெக்ட் ஆகும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.


ஜெனிலியா சம்பந்தப்பட்ட எமோஷனல் காட்சிகள் டச்சிங் மொமெண்ட்ஸ்; அதேபோல்தான் இம்ரான் ஹாஷ்மிக்கும், மகளுக்கும் இடையேயான பாசப்பிணைப்பு கட்சிகளும்.



இம்ரான் ஹாஷ்மி வழக்கமாக பண்ணும் கேங்ஸ்டர் ரோல்தான் என்றாலும், அதுவே மாஸ் காட்சிகளுக்கு உதவியிருக்கிறது. அவர் எத்தனை பேரை வேண்டுமானாலும் கொல்வார் என்று நம்ப வைக்கவும் ஈசியாக அமைந்துவிட்டது அந்த ரோல்.


ஜெனிலியா ஆக்ஷ்ன் காட்சிகளில் வியக்க வைத்துள்ளார்.

Gunmaaster G9 : திரை விமர்சனம் | Gunmaaster G9 Movie Review

குறிப்பாக ‘என் பொண்ணு மேல எவனாவது கைய வெச்சா கொன்னுடுவேன்’ என ஆவேசமாக பேசி அவர் செய்யும் ஸ்டண்ட் மிரட்டல்.


வில்லத்தனத்தில் அபர்ஷக்தி குரானா மிரட்டுகிறார்; ஓவர் காட்சியில் அவர் கொடுக்கும் ட்விஸ்ட் ‘அட’ என சொல்ல வைக்கிறது. ஆனால், கிளைமேக்சில் வழக்கம்போல் எல்லா வில்லன்களும் செய்வதைத்தான் செய்துள்ளார்.



நம்ம ஊர் மாஸ் ஹீரோக்களான விஜய், அஜித் படங்களின் பாதிப்பு பல காட்சிகளில் தெரிகிறது. அதுவே திரைக்கதைக்கு ப்ளஸ் ஆகவும் உள்ளது.


ஹிமேஷ் ரேஷாம்மியா இசையில் பாடல்கள் அருமை; விக்ரம் மோண்ட்ரோஸின் பின்னணி இசை மிரட்டல்.


கெய்கோ நகஷாரா, அனிக் ராம் வெர்மாவின் ஒளிப்பதிவு மற்றும் தேவேந்திர முர்தேஷ்வரின் படத்தொகுப்பு ஆகியவை சிறப்பு.

க்ளாப்ஸ்




  • இம்ரான் ஹாஷ்மி, ஜெனிலியா



  • பரபரப்பான திரைக்கதை



  • ஆக்ஷ்ன் காட்சிகள்



  • இசை




பல்ப்ஸ்

  • வழக்கமான கிளைமேக்ஸ்




மொத்தத்தில் இந்த Gunmaaster G9 கமர்ஷியல் பட விரும்பிகளுக்கு செம விருந்து. கண்டிப்பாக் திரையரங்கில் கண்டு களிக்கலாம்.

Gunmaaster G9 : திரை விமர்சனம் | Gunmaaster G9 Movie Review


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *