90 அடி உயரத்தில் இருந்து குதித்த நடிகை ராஷ்மிகா மந்தனா.. அதிர்ச்சியில் வந்த கண்ணீர்


Rashmika Mandanna performed a 90-foot waterfall jump: மைசா திரைப்படத்திற்காக நடிகை ராஷ்மிகா மந்தனா 90 அடி உயரத்தில் இருந்து குதித்துள்ளார். இந்த அனுபவத்தை சமீபத்தில் அவர் பகிர்ந்துகொண்டார்.

நடிகை ராஷ்மிகா



பான்-இந்தியன் ஸ்டாராக வலம் வரும் ராஷ்மிகா மந்தனாவின் நடிப்பில் அடுத்ததாக மைசா திரைப்படம் வெளியாகவுள்ளது. இயக்குநர் ரவீந்திர புல்லே இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் பழங்குடியின பெண்ணாக நடித்துள்ளார். இப்படத்தில் ஈஸ்வரி ராவ், ராகுல் ரவீந்திரன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.

90 அடி உயரத்தில் இருந்து குதித்த நடிகை ராஷ்மிகா மந்தனா.. அதிர்ச்சியில் வந்த கண்ணீர் | Rashmika Performed A 90 Foot Waterfall Jump

கதையின் நாயகியாக ராஷ்மிகா நடிக்க, இப்படத்தில் கடினமான சண்டை காட்சிகளில் பட்டையை கிளப்பியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ஒரு பழங்குடி இனத்தை சேர்ந்த, கடினமான சூழல்களால் போராளியாக மாறும் அப்பாவி பெண்ணாக வரும் ராஷ்மிகாவிற்கு, உடல் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும் கதாபாத்திரமாக இது அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக நீருக்கடியில் இப்படத்தில் இடம்பெறும் ஒரு சண்டை காட்சியில் கடுமையான உழைப்பை போட்டு நடித்திருக்கிறாராம். இந்த காட்சிகளை படமாக்கும்போதுதான் அவருக்கு காயம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.



தள்ளிப்போன ரிலீஸ்



இப்படத்தின் டீசர் மற்றும் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கடந்த நவம்பர் 27-ஆம் தேதி இப்படம் திரைக்கு வரவிருந்த நிலையில், திடீரென அந்த தேதியில் மாற்றம் ஏற்பட்டது. இதனால் இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது. விரைவில் புதிய ரிலீஸ் தேதி என்னவென்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளனர்.

90 அடி உயரத்தில் இருந்து குதித்த நடிகை ராஷ்மிகா மந்தனா.. அதிர்ச்சியில் வந்த கண்ணீர் | Rashmika Performed A 90 Foot Waterfall Jump



90 அடி உயரத்தில் இருந்து குதித்த ராஷ்மிகா


சமீபத்திய ப்ரோமோஷன் விழா ஒன்றில் பங்கேற்ற நடிகை ராஷ்மிகா மந்தனா, மைசா திரைப்படத்தில் 90 அடி உயரத்தில் இருந்து குதித்த அனுபவத்தை பகிர்ந்துகொண்டார். அதைப்பற்றி அவர் கூறும்போது, “எனக்கு எப்போதுமே உயரம் மற்றும் பாம்புகள் மீது மிகுந்த பயம் உள்ளது. இருந்தும், மைசா படத்திற்காக ஒரு காட்சியில் 90 அடி உயரத்திலிருந்து குதிப்பதற்கு தயாரானேன். எனக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளாக வயர்கள் உள்ளிட்ட சாதனங்கள் என்னோடு இணைக்கப்பட்டன. அதுவே எனக்கு மிகுந்த பதற்றத்தை ஏற்படுத்தியது. அந்த சூழலில் சரி இதுதான் கடைசி என்று நான் நினைத்தேன். அங்கிருந்து குதித்தபோது, இங்கிருந்து அங்கு வரை எல்லாம் ஸ்லோமோஷனில் நடப்பது போல் இருந்தது. பாதுகாப்பாக கீழே வந்தபின்னரும் அதிர்ச்சியில் நடுங்கியபடி கண்ணீர் விட்டேன்” என ராஷ்மிகா கூறியுள்ளார்.

90 அடி உயரத்தில் இருந்து குதித்த நடிகை ராஷ்மிகா மந்தனா.. அதிர்ச்சியில் வந்த கண்ணீர் | Rashmika Performed A 90 Foot Waterfall Jump


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *