அசிங்கப்படுத்திய சிந்தாமணி, முத்துவிற்கு ஆதரவாக விஜயா சொன்ன வார்த்தை… சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ

சிறகடிக்க ஆசை

அண்ணாமலை குடும்பத்தில் அடுத்தடுத்து ஏதாவது ஒரு பிரச்சனை வந்த வண்ணம் உள்ளது.

இப்போது பாட்டிக்கு எல்லா விஷயமும் மறந்துபோக, முத்து-மீனா, ரவி-ஸ்ருதி இருவருக்கும் திருமணம் நடக்கிறது. அடுத்து கதையில் ரோஹினி-மனோஜ் விவாகரத்து பிரச்சனை வரப்போகிறது, இதில் என்ன முடிவு வரும் என தெரியவில்லை.

அசிங்கப்படுத்திய சிந்தாமணி, முத்துவிற்கு ஆதரவாக விஜயா சொன்ன வார்த்தை... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ | Siragadikka Aasai Serial August 30 Episode Promo

அந்த கொண்டாட்டம் முடிந்த பிறகு இப்போது மீண்டும் ஒரு விசேஷம் நடக்க உள்ளது.

கொண்டாட்டம்

அதாவது சிந்தாமணி படு பிரம்மாண்டமாக தனது மகள் ரேகா-சத்யாவிற்கு திருமண வரவேற்பு ஏற்பாடு செய்கிறார்.

இதற்காக பத்திரிக்கை எடுத்துக்கொண்டு சத்யா அம்மா வீட்டிற்கு செல்கிறார், பத்திரிக்கை கொடுத்து அழைப்பதோடு சத்யா அம்மாவிற்கு சில விஷயங்கள் கொடுக்கிறார். சத்யா அம்மா ஏழையாக இருப்பதை குத்திக்காட்டி கொஞ்சம் நகை எல்லாம் போட்டுக்கொண்டு வாருங்கள் என கூற அவர் வருத்தப்படுகிறார்.

அசிங்கப்படுத்திய சிந்தாமணி, முத்துவிற்கு ஆதரவாக விஜயா சொன்ன வார்த்தை... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ | Siragadikka Aasai Serial August 30 Episode Promo

நாளைய எபிசோடின் புரொமோவில், சிந்தாமணி விஜயா வீட்டிற்கு பத்திரிக்கை எடுத்துக்கொண்டு வருகிறார்.

பின் மீனாவிடம் பணம் கொடுத்து இந்த பணத்தில் உனக்கும், முத்துவிற்கும் நல்ல உடை வாங்கிக்கொண்டு வாருங்கள், அங்கு வருபவர்கள் எல்லாம் பெரிய ஆட்கள் என்கிறார்.

அசிங்கப்படுத்திய சிந்தாமணி, முத்துவிற்கு ஆதரவாக விஜயா சொன்ன வார்த்தை... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ | Siragadikka Aasai Serial August 30 Episode Promo

அதனை கேட்டதும், விஜயா என் மகன் ஒன்றும் எதுவும் இல்லாதவன் இல்லை, அவனும் ஒரு டிராவல்ஸ் ஓனர், 4, 5 கார்கள் வைத்துள்ளான் என கூற முத்து-மீனா இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *