கர்ப்பமாக இருக்கும்போது ‘அல போலேலோ’ ஆடினேன்.. எல்லோரும் ஷாக்: பூர்ணா
சூப்பர்ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் 2 படத்தின் ‘அல போலேலோ’ பாடல் சமீபத்தில் வெளியாகி பெரிய அளவில் வைரல் ஆனது.
அந்த பாடலில் நடிகை பூர்ணா டான்ஸ் ஆடி இருந்தார். அது பற்றி அவர் தற்போது அளித்த பேட்டி எல்லோருக்கும் ஷாக் கொடுத்து இருக்கிறது.
கர்ப்பமாக இருந்தேன்
அந்த பாடலில் ஆடும்போது நான் கர்ப்பமாக இருந்தேன். அது எனக்கே தெரியாது. அதற்கு பிறகு தான் டெஸ்ட் ரிசல்ட் வந்தது.
அது பற்றி சொன்னதும் தயாரிப்பு நிறுவனத்தில் எல்லோரும் ஷாக். நான் அவ்வளவு ஆடியும் என் மகள் உள்ளே இருந்திருக்கிறாள்.
தற்போது என் மகளை ‘ஜெயிலர் பேபி’ என்று தான் நான் அழைக்கிறேன் என பூர்ணா கூறியிருக்கிறார்.
