சன் டிவியின் துளசி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை… போட்டோ இதோ

துளசி சீரியல்
ஸ்ராவ்னிதா ஸ்ரீகாந்த், சம்யுதா, அருண் குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க கடந்த மே மாதம் சன் டிவியில் ஒளிபரப்பாக தொடங்கிய சீரியல் தான் துளசி.
நடிகர் விஜய்-ரம்பா, தேவயானி உள்ளிட்டோர் நடித்த நினைத்தேன் வந்தாய் படத்தின் கதை போலவே துளசி சீரியல் கதைக்களம் என கூறப்பட்டது.
இளம் கலைஞர்கள் நடிக்க முதல்முறையாக புதிய ஜோடி இணைய ஒளிபரப்பாக தொடங்கிய இந்த சீரியலுக்கு கொஞ்சம் கொஞ்சமாக ரசிகர்கள் கூட்டமும் அதிகமாகிக் கொண்டே வருகிறது.
புதியதாக தொடங்கப்பட்ட இந்த சீரியலில் இப்போது நடிகை ஒருவர் என்ட்ரி கொடுக்க இருக்கிறார். அதாவது நடிகை அகிலா தான் துளசி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க என்ட்ரி கொடுக்கிறாராம்.






