ஹேமா ராஜ்குமார் முதல் குரேஷி வரை.. பிக் பாஸ் 10-ல் கலந்துகொள்ளும் 21 போட்டியாளர்களின் லிஸ்ட்..


பிக் பாஸ் 10 வரும் செப்டம்பர் 6-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், இதில் கலந்துகொள்ளும் 21 போட்டியாளர்கள் குறித்த ஏறக்குறைய உறுதியான பட்டியல் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ்

பல கோடி மக்கள் பார்க்கும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

ஆனால், இம்முறை தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 4 மொழி பிக் பாஸ் நிகழ்ச்சிகளும் ஒரே நாளில் (செப்டம்பர் 6) தொடங்குவதால் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

போட்டியாளர்களின் பட்டியல்

ஒவ்வொரு முறை பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கும்போதும், அதில் கலந்துகொள்ளப்போகும் போட்டியாளர்கள் பற்றிய விவரங்கள் இணையத்தில் கசிந்து வைரலாகும்.

நிகழ்ச்சி நாள் நெருங்க நெருங்க ஏறக்குறைய உறுதியான தகவல்கள் வெளிவரும்.

அந்த வகையில், பிக் பாஸ் 10 தமிழ் ஒளிபரப்பாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அதில் கலந்துகொள்ள போகும் 21 போட்டியாளர்கள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் யார்யாரென்று பார்க்கலாம் வாங்க.

1. ஜாய் க்ரிசில்டா (ஸ்டைலிஸ்ட்)

2. நடிகை பிரியா ராமன்

3. சீரியல் நடிகை ஜனனி அசோக் குமார்

4. ‘குக் வித் கோமாளி’ பிரபலம் டாலி

5. முன்னாள் கிரிக்கெட் வீரர் முரளி விஜய்

6. சீரியல் நடிகர் ஆர்யன்

7. சீரியல் நடிகர் புவி அரசு

8. திரைப்பட விமர்சகர் பிரசாந்த்

9. சீரியல் நடிகர் வினோத் பாபு

10. சீரியல் நடிகர் நவீன்

11. விஜய் டிவி பிரபலம் குரேஷி

12. சிந்தியா வினோலின் (நடன இயக்குநர் சாண்டி மாஸ்டர் மனைவியின் தங்கை)

13. சீரியல் நடிகை அக்ஷிதா அசோக்

14. சீரியல் நடிகை ஃபரினா

15. சீரியல் நடிகை ஹேமா ராஜ்குமார்

16. சீரியல் நடிகை பானுமதி

17. ஸ்வப்னா (மேக்கப் ஆர்ட்டிஸ்ட்)

18. சீரியல் நடிகை காயு ஸ்ரீ

19. கரிஷ்மா (காமென் மேன்)

20. முனியம்மா (காமென் மேன்)

21. ஜேசன் கௌஷிக் (காமென் மேன்)


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *