ஹிப்ஹாப் ஆதியின் மீசைய முறுக்கு 2 படம் எப்படி இருக்கு…
மீசைய முறுக்கு 2
தமிழ் சினிமாவில் வரும் வெள்ளிக்கிழமை அதாவது செப்டம்பர் 25ம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் மீசைய முறுக்கு 2.
ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்துள்ள இப்படத்தில் சைத்ரா ஆச்சர், கேதிகா ஷர்மா, ரம்யா ரங்கநாதன் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர்.
இவர்களுடன் ஹர்ஷத்கான், பாபா பாஸ்கர், கருணாஸ், நாசர், ஆடுகளம் நரேன், கருணாகரள் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ரசிகர்களின் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கும் இப்படத்தை அவ்னி மூவீஸ் மற்றும் பென்ஸ் மீடியா சார்பில் குஷ்பு சுந்தர், ஏ.சி.எஸ்.அருண்குமார் தயாரித்துள்ளனர்.
விமர்சனம்
இந்த மீசைய முறுக்கு 2 திரைப்படம் என்னுடைய வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட பயோபிக்.
ஆனால், ‘மீசைய முறுக்கு 2’ இசை, இசைக் கலைஞர்கள் மற்றும் அவர்களது வாழ்க்கையைப் பற்றிய உலகளாவிய கதை. இசையைத் தங்களது வாழ்க்கைப் பாதையாகத் தேர்ந்தெடுக்கும் மனிதர்களின் கனவுகள், போராட்டங்கள், பயணங்கள் மற்றும் உணர்வுகளை இப்படம் பேசுவதாக பட நிகழ்ச்சியில் ஹிப்ஹாப் ஆதி கூறியிருந்தார்.
ரிலீஸிற்கு தயாராகியுள்ள நிலையில் படத்தின் முதல் விமர்சனம் வந்துள்ளது.
மீசைய முறுக்கு 2 திரைப்படம் தீயாக இருப்பதாக சினிமா பிரபலம் ஒருவர் டுவிட் செய்துள்ளார்.
#MeesaiyaMurukku2 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
— Aditi Ravindranath (@aditi1231) September 21, 2026
