தனது கணவர் குறித்து அழுதபடி நடிகை ரோஜா கூறிய விஷயம்…


நடிகை ரோஜா

நடிகை ரோஜா, தமிழ் சினிமா கொண்டாடிய முக்கிய நடிகைகளில் ஒருவர்.

இவர் தற்போது லெனின் பாண்டியன் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார், இப்படம் வரும் செப்டம்பர் 25ம் தேதி வெளியாக உள்ளது. இதனால் நடிகை ரோஜா புரொமோஷன் வேலைகளில் பிஸியாக உள்ளார்.

அப்படி இப்படத்திற்கான ஒரு புரொமோஷன் நிகழ்ச்சியில் தனது கணவரும், இயக்குனருமான செல்வமணி நினைத்து கண் கலங்கியுள்ளார்.

தனது கணவர் குறித்து அழுதபடி நடிகை ரோஜா கூறிய விஷயம்... அப்படி சொல்லியிருக்க கூடாது... | Actress Roja Emotional Speech About Her Husband

காரணம்

என்ன
அதாவது இயக்குனர் செல்வமணி ஒரு பேட்டியில், நான் சம்பாதித்து கிட்டத்தட்ட 15 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் இப்போதும் வீட்டில் அதே மரியாதையுடனும் அன்புடனும் என்னை நடத்துகிறார்கள்.

அதற்கு காரணம் ரோஜா என் மீது வைத்திருக்கும், அன்பும் மரியாதையும் தான் என பேசியிருந்தார். அவர் கொடுத்த பேட்டியை பார்த்த ரோஜா கண்கலங்கியுள்ளார்.

அவர் அப்படி பேசியதை பார்த்து அழுதுவிட்டேன். அவர் அப்படி பேசியதை நினைத்தாலே இப்போதும் எனக்கு கஷ்டமாகத்தான் இருக்கிறது. நான் செல்வாவை எப்போதுமே ஒரு வெற்றி பெற்ற இயக்குநராகத்தான் பார்த்திருக்கிறேன்.

தனது கணவர் குறித்து அழுதபடி நடிகை ரோஜா கூறிய விஷயம்... அப்படி சொல்லியிருக்க கூடாது... | Actress Roja Emotional Speech About Her Husband

சினிமாவாக இருந்தாலும் சரி, அரசியலாக இருந்தாலும் சரி, அவருடைய அம்மா, அவருடைய குடும்பத்தினர் என அனைவருமே என்னை மதிக்கிறார்கள். அந்த மரியாதை எனக்கு செல்வா மூலமாகத்தான் கிடைத்தது.



என் மனைவிதான் என்னை பார்த்துக்கொள்கிறார் என்று அவர் சொல்வது எனக்கு ரொம்பவும் பெருமையாக இருக்கிறது. ஆனால், அவர் அப்படி சொல்லியிருக்கக் கூடாது. ஏனென்றால் அவர் எப்போதுமே இறங்கி இருப்பது எனக்கு பிடிக்காது என பேசியுள்ளார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *