Mirzapur the movie: திரை விமர்சனம்
Mirzapur the movie
பங்கஜ் திரிபாதி, திவ்யேந்து ஆகியோர் நடிப்பில், 2018-யில் வெளியாகி சக்கைபோடு போட்ட Mirzapur வெப் சீரிஸின் திரைப்பட வடிவம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் வாங்க.
கதைக்களம்
உத்தரபிரதேசத்தின் மிர்ஸாபூர் நகரத்தில் பெரும் புள்ளியாக இருப்பவர் அகண்டானந்த் திரிபாதி. இவரது மகன் முன்னா அப்பாவிற்கு பிறகு நாம் தான் மிர்ஸாபூரை ஆளப்போகிறோம் என்ற நினைப்பில் சுற்றுகிறார்.
முன்னாவிற்கு தன் அப்பாவின் வலது கை போன்ற நம்பிக்கையான ஆளான குட்டு பண்டித் மீது கோபம் இருக்கிறது. குட்டுவும், பப்புலு பண்டிடும் தனது முதலாளிக்காக எந்த வேலையையும் இறங்கி பார்க்கிறார்கள்.
இந்த சூழலில் தனது எதிரி பைரவ் சிங்கிடம் இருந்து தப்பிக்கும் பாபன் யாதவ், ராஜஸ்தானில் இருந்து உத்தரப்பிரதேசத்திற்கு வருகிறார்.
அவர் தனது போதைப்பொருள் தொழிலை விரிவுப்படுத்த வேண்டும் என்று நினைக்க, மிர்ஸாபூரில் மட்டும் வேண்டாம் என்று அரசியல் பிரபலம் அவரிடம் அறிவுறுத்துகிறார்.
இதனால் ஏன் என்ற கேள்வி அவருக்கு எழ, அங்கு கலீன் என்கிற அகண்டானந்த் இருப்பதாக தெரிந்து கண்டிப்பாக மிர்ஸாபூரை பிடிக்க வேண்டும் என முடிவெடுக்கிறார் பாபன் யாதவ்.
பாபன் யாதவின் இந்த முடிவு அகண்டானந்த் மற்றும் அவரைச் சேர்ந்தவர்களை எவ்வாறு பாதிக்கிறது? இறுதியில் என்ன ஆனது? என்பதே மீதிக்கதை.
படம் பற்றிய அலசல்
2018யில் வெளியான மிர்ஸாபூர் வெப் சீரிஸின் தொடர்ச்சியாக இல்லாமல், புதிய கதையாக குர்ம்மீத் சிங் இப்படத்தை இயக்கியுள்ளார்.
2018யிலேயே ஆரம்பிக்கும் இந்தக் கதை பிரதான கதாபாத்திரங்களின் தன்மையை அப்படியே காட்டும் வகையில் புனீத் கிருஷ்ணா எழுதியுள்ளார்.
ஆகையால், சில முகம் சுளிக்கும் வகையிலான ஆபாச காட்சிகள் இருப்பது உறுத்தல். என்றாலும் திரைக்கதை படுவேகமாகவே பயணிக்கிறது.
பிரதான கதாபாத்திரம் அகண்டானந்த் ஆக வரும் பங்கஜ் திரிபாதிதான் என்றாலும், அவர் குறைந்த காட்சிகளிலேயே வந்து செல்கிறார்.
அதே சமயம் வில்லன் கதாபாத்திரத்திற்கு வலுசேர்க்கும் விதமாக பாபன் யாதவாக நடித்திருக்கும் ரவி கிஷனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
குட்டுவிற்கும் ஷ்ரேயாவிற்கும் இருக்கும் காதல் காட்சியை விட, பப்லுவிற்கும் கோலுவிற்கும் இடையேயான காதல் அழகாக உள்ளது.
அகண்டானந்த் மீதான குட்டு, பப்லுவின் விஸ்வாசம், பாபன் யாதவின் ஈகோ, முன்னாவின் பொறாமை, பீனாவின் பழி உணர்ச்சி போன்றவற்றை இயக்குநர் மிக நேர்த்தியாகவும் திரைக்கதையில் கொண்டு செல்கிறார்.
வெப் சீரிஸை பார்க்காதவர்களுக்கு கூட புரியும் வகையில்தான் இப்படத்தை எடுத்துள்ளார் குர்ம்மீத் சிங். ஆக்ஷன், செண்டிமெண்ட், வன்முறை என எல்லா ஏரியாவிலும் கலக்கியுள்ளார் இயக்குநர்.
பங்கஜ் திரிபாதி, ரவி கிஷன் இருவரும் தங்கள் கதாபாத்திரத்திற்கு உரித்தான மிடுக்குடன் நடித்துள்ளனர். அலி பசல் மற்றும் திவ்யேந்து இடையேயான போட்டி செம.
ஸ்வேதா திரிபாதி, ஷ்ரியா, ஹர்ஷிதா, ரசிகா துகல், சோனல் சௌகான் ஆகியோருக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கும் இயக்குநர் முக்கித்துவம் கொடுத்துள்ளார்.
மூன்றே கால் மணிநேரம் ஓடினாலும் எங்கும் சலிப்பு ஏற்படாத வகையில் படதொகுப்பு செய்துள்ளார் வில்சன் பிரம்புரியா. ஜான் ஸ்டீவர்ட்டின் பின்னணி இசை மிரட்டல். சஞ்சய் கபூரின் கேமரா ஒர்க் பிரமாதம்.
க்ளாப்ஸ்
நடிகர்களின் பங்களிப்பு
திரைக்கதை
இசை
சண்டைக்காட்சிகள்
பல்ப்ஸ்
ஆபாச காட்சிகளை தவிர்த்திருக்கலாம்
மொத்தத்தில் இந்த Mirzapur பெரிய திரையிலும் ஆட்சி செய்துவிட்டது. வயது வந்தோர் கண்டிப்பாக பார்த்து ரசிக்கலாம்.
