அஜித் ட்ரைலருக்கே இப்படி ஒரு வரவேற்பா?… அடித்து நொறுக்கும் முன்பதிவு விவரம் இதோ..
நடிகர் அஜித்
அஜிய் தமிழ் சினிமா கொண்டாடும் உச்ச நடிகர். இவர் சமீப காலமாக தன் படங்களில் பெரிதும் கவனமின்றி கார் ரேஸ்-ல் தான் முழுகவனமும் செலுத்தி வருகிறார்.
அந்த வகையில் தான் பங்கேற்ற கார் பந்தய வீடியோக்களை தொகுத்து ஒரு டாக்குமெண்ட்ரி ஆக கிளாடியேட்டர் என்ற பெயரில் உருவாக்கியுள்ளார். அதை மிக விரைவில் திரைக்கு கொண்டு வர உள்ளாராம்.
அந்த ட்ரைலர் ஞாயிறு அன்று தமிழ்நாடு முழுவதும் பல திரையரங்குகளில் வெளிவரவுள்ளது.
அந்த ட்ரைலர் முன் பதிவு நேற்று தொடங்க அனைத்து இடங்களிலும் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டது.
இதனால் படக்குழு செம சந்தோஷத்தில் இருக்க, கண்டிப்பாக ஞாயிறு அன்று தமிழகத்தில் பல திரையரங்குகளில் திருவிழா போல் இருக்கும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.
