முத்துவேலை கொலை செய்ய முயன்ற குமார்.. சிறையில் கதிர்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்

முத்துவேலை கொலை செய்ய முயன்ற குமார்.. சிறையில் கதிர்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்

சிறையில் கதிர்

கதிர் தனது மாமனார் முத்துவேலுடன் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் அங்கு வந்த குமார், கதிருடன் சண்டை போட, அதை தடுக்க வந்த முத்துவேலை குமார் தள்ளிவிட்டார். இதனால் அவருக்கு தலையில் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கும் நிலைமை ஏற்பட்டது. ஆனால், கதிர் தான் முத்துவேலை தள்ளிவிட்டார் என குமார் பொய் கூற, தற்போது கதிரை கைது செய்துள்ளனர்.

முத்துவேலை கொலை செய்ய முயன்ற குமார்.. சிறையில் கதிர்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் | Kumar Try To Kill Muthuvel In Pandian Stores

இந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முத்துவேல் கண்விழித்துவிட்டார். உடனடியாக அவரை பார்க்க அவருடைய தம்பி சக்திவேல் மற்றும் குமார் இருவரும் அங்கு சென்றனர். அப்போது, கதிர் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் விஷயத்தை கதிர்வேல் கூற, தன்னை தள்ளிவிட்டது கதிர் இல்லை குமார் என்கிற உண்மையை சொல்ல முத்துவேல் முயற்சி செய்கிறார். ஆனால், அவர் சொல்வது யாருக்கும் புரியவில்லை.

முத்துவேலை கொலை செய்ய முயன்ற குமார்.. சிறையில் கதிர்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் | Kumar Try To Kill Muthuvel In Pandian Stores

கொலை செய்ய முயன்ற குமார்

இதன்பின், யாரும் இல்லாத சமயத்தில் முத்துவேல் இருக்கும் இடத்திற்கு குமார் வருகிறார். பெரியப்பா உயிரோடு இருந்தால் எல்லா உண்மையையும் கூறிவிடுவார், அதன்பின் நான்தான் சிறைக்கு செல்ல வேண்டும் என்பதால், தனது பெரியப்பா என்று கூட பார்க்காமல் அவரை கொலை செய்ய முயற்சி செய்கிறார்.

முத்துவேலை கொலை செய்ய முயன்ற குமார்.. சிறையில் கதிர்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் | Kumar Try To Kill Muthuvel In Pandian Stores

மருத்துவமனையில் முத்துவேலுக்காக வைக்கப்பட்டுள்ள ஆக்சிஜனை எடுத்துவிடுகிறார் குமார். அந்த சமயத்தில் குமாரின் தந்தை சக்திவேல் அங்கு வர, என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கி போய் நிற்கிறார் குமார். இனி அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை நாளை பார்ப்போம்.

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *