மகுடம் 6 நாட்களில் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வி
விஷால் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த மகுடம் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் எதிர்பார்த்த வசூலை எட்ட முடியாமல் படுதோல்வியை சந்தித்துள்ளது.
மகுடம்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் விஷால், இயக்குநராக அறிமுகமான திரைப்படம் மகுடம். இப்படத்தில் துஷாரா விஜயன், அஞ்சலி, ஜான் விஜய், தம்பி ராமையா என பலரும் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
ஒவ்வொரு புதிய திரைப்படம் வெளிவரும்போதும் அதற்குரிய எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் இருக்கும். அந்த வகையில், மகுடம் திரைப்படத்தை விஷால் முதல் முறையாக இயக்கியுள்ளார் என்பதால் இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்திருந்தனர்.
ஆனால், அந்த எதிர்பார்ப்பை இப்படம் முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. ரசிகர்களின் ஏமாற்றம் காரணமாக இப்படத்திற்கு எதிர்பார்த்த அளவிற்கு வசூலும் கிடைக்கவில்லை.
பாக்ஸ் ஆபிஸ்
இந்நிலையில், 6 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள மகுடம் திரைப்படம் உலகளவில் இதுவரை ரூ. 2.8 கோடி வரை மட்டுமே வசூல் செய்துள்ளது.
இது இப்படத்திற்கு கிடைத்துள்ள டிசாஸ்டர் வசூல் என கூறப்படுகிறது. மேலும், விஷாலின் திரை வாழ்க்கையில் இவ்வளவு பெரிய படுதோல்வியை சந்தித்துள்ள முதல் திரைப்படமும் இதுவே ஆகும்.





