ஹீரோவாக களமிறங்கும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்.. புகைப்படத்துடன் இதோ
சீரியல் நடிகர்கள் சின்னத்திரை புகழை பயன்படுத்தி சினிமாவில் நுழைவது ஒன்றும் புதிய விஷயம் அல்ல. தற்போது உச்சத்தில் இருக்கும் சில நடிகர்கள் சின்னத்திரையில் இருந்து வந்தவர்களாக இருக்கிறார்கள்.
தற்போது விஜய் டிவியில் முக்கிய சீரியலாக இருந்து வரும் சிறக்கடிக்க ஆசை தொடரில் மனோஜ் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் ஸ்ரீதேவா ஹீரோவாக படத்தில் நடிக்கிறாராம்.
ஹீரோ
606 என டைட்டில் வைத்த படத்திற்கு அவர் ஹீரோவாக நடிக்கிறாராம்.
அதன் பூஜை இன்று நடைபெற்று இருக்கிறது.
அதன் புகைப்படங்களை அவரே வெளியிட்டு தனது அடுத்த படம் தொடங்கி இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
