தாறுமாறு வசூல் வேட்டையில் நடிகர் சூர்யாவின் கருப்பு…. 6 நாள் வசூல் விவரம் இதோ…

கருப்பு படம்
ஆர்.ஜே.பாலாஜி-சூர்யா கூட்டணியில் முதன்முறையாக வெளியாகி இருக்கும் திரைப்படம் தான் கருப்பு.
இதில் த்ரிஷா, இந்திரன்ஸ், நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.
படத்தில் நீதிமன்ற பின்னணி, சமூக கருத்து, தெய்வ நம்பிக்கை என மாஸ் படமாக அமைந்துள்ளது. கலவையான விமர்சனங்கள் வந்தாலும் ரசிகர்கள் திரையரங்குகளில் படம் பெரிய அளவில் கொண்டாடுகின்றனர்.
படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளதால் சூர்யா ஸ்பெஷல் வீடியோ எல்லாம் வெளியிட்டு வெற்றிக்கு படக்குழு மற்றும் ரசிகர்களுக்கு நன்றி கூறியுள்ளார்.
பாக்ஸ் ஆபிஸ்
இப்படம் முதலில் மே 14ம் தேதி தான் வெளியாக இருந்தது, ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்க கடைசியில் பணப் பிரச்சனையில் சிக்கியது.
எல்லோரையும் சிரிக்க வைக்கும் ஆர்.ஜே.பாலாஜி படம் தள்ளிப்போனதற்கு வீடியோ வெளியிட்டு அழுதார். படம் எல்லா பிரச்சனைகளும் முடிந்து மே 15ம் தேதி வெளியாகி இருந்தது.
படம் வெளியாகி 3 நாட்களில் ரூ. 147 கோடி வரை வசூலித்திருந்த நிலையில் 6 நாள் முடிவில் படம் மொத்தமாக ரூ. 180 கோடி வரை தாறுமாறு வசூல் வேட்டை செய்துள்ளதாம்.






