வெறுப்பின் உச்சத்தில் ஜீவா எடுத்த அதிரடி முடிவு… ஆதிக்கு காத்திருந்த அதிர்ச்சி! – வாகை சூடவா இன்றைய எபிசோட் அப்டேட்

Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான தொடர் வாகை சூடவா, நாளுக்கு நாள் பரபரப்பையும் சுவாரஸ்யத்தையும் கூட்டி வருகிறது. நேற்றைய எபிசோடில், வீட்டிற்கு வந்த ஆதி, மீனாட்சி சமைத்த உணவை புகழ்ந்து பேசி ஜீவாவை கடுப்பேற்றியிருந்தான். இதன் தொடர்ச்சியாக இன்று என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம்.
வீட்டிலிருந்து கிளம்பும் ஆதியை வழியனுப்ப ஜீவாவும் அவனுடன் செல்கிறான். ஆனால் அங்கும் ஆதி தனது கிண்டல் பேச்சை நிறுத்தாமல், ஜீவாவின் பொறுமையை சோதிக்கிறான். தொடர்ந்து வெறுப்பேற்றும் ஆதியின் பேச்சால், ஜீவா ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சிக்கே செல்கிறான்.
அப்போது திடீரென, “நீ சாப்பிட்ட வஞ்சரம் மீன்ல நான் பாய்சன் ஸ்ப்ரே பண்ணி வைத்திருந்தேன்!” என்று கூறி ஆதிக்கு அதிர்ச்சி கொடுக்கிறான். அதோடு நிற்காமல், சிக்கன், மட்டன் என அவன் சாப்பிட்ட ஒவ்வொரு உணவையும் குறிப்பிட்டு, அதிலெல்லாம் ஏதோ கலந்திருந்ததாக சொல்லி மேலும் பதற்றமடைய வைக்கிறான்.
ஜீவாவின் வார்த்தைகளை நம்பிய ஆதி, உயிரே போகும் நிலை வந்துவிட்டதோ என பயத்தில் திணறுகிறான். உடனே தன்னை காப்பாற்றிக்கொள்ள வாந்தி எடுக்க முயற்சிப்பதும், பதட்டத்தில் அங்கும் இங்கும் ஓடுவதும் சிரிப்பும் பரபரப்பும் கலந்த காட்சிகளாக அமைகின்றன.
இதற்கிடையில், மறுபக்கம் மீனாட்சி, ஆதியின் திடீர் வருகைக்கு பின்னால் ஏதோ காரணம் இருக்கிறதோ என சந்தேகப்படத் தொடங்குகிறாள். ஆதி எதற்காக வந்தான்? அவனது வருகையின் உண்மையான நோக்கம் என்ன? என்ற கேள்விகள் அவளது மனதை ஆக்கிரமிக்கின்றன.
ஜீவாவின் இந்த அதிரடி நடவடிக்கை ஆதிக்கு என்ன விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது? மீனாட்சி உண்மையை கண்டுபிடிப்பாரா?
காமெடி, பரபரப்பு மற்றும் எதிர்பாராத திருப்பங்களால் நிரம்பிய இன்றைய வாகை சூடவா எபிசோடை தவறாமல் உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணுங்கள்!






